முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்னணு வாக்கு எந்திரச் சவாலை சந்திக்க எந்த அரசியல் கட்சியும் தயாராக இல்லை சுப்ரீம்கோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்

வியாழக்கிழமை, 10 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: மின்னணு வாக்கு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று ஆம் ஆத்மி கட்சி செய்து காட்டியதையடுத்து தங்களது மின்னணு எந்திரத்தில் அப்படிச் செய்ய முடியுமா என்று தேர்தல் ஆணையம் சவால் விடுத்தது. இந்நிலையில் தங்கள் சவாலை எந்தக் கட்சியும் சந்திக்க தயாராக இல்லை என்று சுப்ரீம்கோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு மின்னணு வாக்கு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியுமா, மற்றும் வாக்காளர் தாங்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்று அறியும் வகையில் பேப்பர் அடையாளம் வருமாறு செய்ய முடியுமா ஆகிய சாத்தியங்களை விசாரித்து வருகிறது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் சுப்ரீம்கோர்ட்டில் கூறும் போது, சில கட்சிகள் ஈவிஎம் எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று ஆரவாரமாகக் குரல்களை எழுப்பின, இந்நிலையில் அதனை தங்கள் எந்திரத்தில் செய்து காட்ட முடியுமா என்று சவால் விடுக்கப்பட்டது, ஜூன் - 3ம் தேதி இதற்காகவென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஈவிஎம் சாலஞ்சிற்கு தேசிய மாநாட்டுக் கட்சி, சிபிஎம் கட்சியைத் தவிர எந்த முக்கியக் கட்சியும் வரவில்லை. அதுவும் தேசிய மாநாட்டுக் கட்சியும், சி.பி.எம் கட்சியும் கூட சவாலைச் சந்திக்க வரவில்லை, எந்திரம் எப்படி செயல்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளவே வந்ததாகத் தெரிவித்தனர்

“எனவே எந்த ஒரு அரசியல் கட்சியோ, நபரோ ஈவிஎம் எந்திரத்தில் எப்படி முறைகேடு செய்யலாம் என்பதை நிரூபிக்க முடியவில்லை. இதனையடுத்து எதிர்கால தேர்தல்களில் வாக்காளர் எந்தக் கட்சிக்கு வாக்கிட்டார் அது சரியாக அங்கு பதிவாகியுள்ளதா என்பதை அவர் அறியும் விதமாக பேப்பர் ட்ரெய்ல் முறை கொண்டு வரப்படும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் செய்தியாளர் அறிவிக்கை வெளியிட்டோம், 2019-ல் வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த சின்னத்தில்தான் வாக்கு பதிவாகியுள்ளதா என்பதை அறிய முடியும்” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து