முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி.யில் கேள்வி கேட்க லஞ்சம்: முன்னாள் எம்.பி.க்கள் 11 பேர் மீது கிரிமினல் வழக்கு: கோர்ட்டு உத்தரவு

வியாழக்கிழமை, 10 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுக்குள்ளான 11 முன்னாள் எம்.பி.க்கள் மீது லஞ்சம் மற்றும் கிரிமினல் சதி குற்றச்சாட்டை பதிவு செய்யுமாறு டெல்லி தனிக்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு பாராளுமன்றம் நடந்துகொண்டியிருந்தபோது சபையில் கேள்வி கேட்க எம்.பி.க்கள் பணம் பெறுகிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காக 2 பத்திரிகையாளர்கள் சேர்ந்து சில எம்.பி.க்களிடம் பணம் கொடுப்பது மாதிரியும் அதை அந்த எம்.பி.க்கள் பெறுவது மாதிரியும் மறைமுகமாக வீடியோ எடுத்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பணம் பெற்ற அந்த எம்.பி.க்கள் 11 பேர் மீது டெல்லி தனி கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாரதிய ஜனதாவை சேர்ந்த முன்னாள் எம்.பி.க்களான சத்தர்பால் சிங் லோதா, அன்னா சாகிப் என்ற எம்.கே. பாட்டீல், சந்திர பிரதாப் சிங், பிரதீப் காந்தி, ஒய்.ஜி.மகாஜன், சுரேஷ் சந்தல், ஒய்.ஜி.மகாஜன்,பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள் நரேந்தர் குமார் குஷ்வாஹா, லால்சந்திரகோல், ராஜா ராம்பால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராம்சேவக், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை சேர்ந்த மனோஜ் குமார் ஆகியோர் மீதும் தனிநபர்கள் ரவீந்தர் குமார் மற்றும் விஜய் போகத் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது. இவர்களில் விஜய் போகத் மரணமடைந்துவிட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். மற்றவர்கள் மீது லஞ்சம் மற்றும் கிரிமினல் சதி செய்ததாக  வழக்குப்பதிவு செய்ய டெல்லி தனிக்கோர்ட்டு நீதிபதி பூனம் செளத்ரி உத்தரவிட்டார்.

நேற்று நடந்த விசாரணையின்போது அரசு சார்பாக அதுல் ஸ்ரீவத்ஸ்வா ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் கூறுகையில் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக இந்த முன்னாள் எம்.பி.க்கள் தங்களுக்குரிய அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தியுள்ளனர் என்றார். முன்னாள் எம்.பி.க்கள் லோதா, ராம்பால் மற்றும் ரவீந்தர் குமார் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர். மற்ற எம்.பி.க்கள் கோர்ட்டில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு வாங்கி இருந்தனர்.

இரண்டு பத்திரிகையாளர்கள் மீது லஞ்சம் கொடுப்பதை ஊக்குவித்தாக குற்றஞ்சாட்டி அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அதை டெல்லி ஐகோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்துவிட்டது. மேலும் நேற்று விசாரணையின்போது லஞ்சம் கொடுக்கும்போது எம்.பி.க்கள் மற்றும் அது தொடர்பானவர்களுக்கிடையே நடந்த உரையாடல் குறித்த சி.டி மற்றும் டி.வி.டி போட்டுக்காட்டப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து