குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் விழாவை மாவட்ட கலெக்டர் சிவஞானம் தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2017      விருதுநகர்
vnr news

  விருதுநகர்  - விருதுநகர் மாவட்டம்  மீசலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை (10.08.17) முன்னிட்டு குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் விழாவை மாவட்ட ஆட்சியர்  அ.சிவஞானம்  குத்துவிளக்கேற்றி வைத்து இன்று (10.08.17) தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:
நாம் வாழ்க்கையில் உயர்வதற்க்கு ஆரோக்கியம் என்பது அடிப்படையானது. ஆரோக்கியத்திற்;கு அடிப்படை நாம் நம்மையும், நமது பழக்கவழக்கத்தையும், நமது சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். நாம் சுத்தமாக இல்லையென்றால் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன. எனவே அனைவரும் நம்மை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொண்டால்தான் படிப்பில் கவனம் செலுத்தி தங்களது கல்வியறிவை வளர்த்துக் கொள்ள முடியும். மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவ, மாணவியர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்க்காக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமையும் இரும்புச்சத்து மாத்திரைகளை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வழங்க உத்தரவிட்டு அதன்படி வழங்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயது வரையுள்ள 6,15,000 சிறுவர் சிறுமியர்களுக்கு குடற்புழுக்களால் ஏற்படும் இரத்தசோகை, உடல்சோர்வு, மனச்சோர்வு, மூளை வளர்ச்சி குன்றுதல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு, அனைத்துக் குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை இன்று வழங்கப்படுகிறது. மேலும் விடுபட்ட 1 வயது முதல் 19 வயது வரையுள்ள மாணவ மாணவியர்களுக்கு 17.08.17 அன்று வழங்கப்படும். குடற்புழு நீக்க மாத்திரைகளை தவறாமல் வாங்கி மென்று உட்கொள்ளுமாறும், இதனை மருத்துவர்களும், பள்ளி ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்  அ.சிவஞானம்  கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
 இவ்விழாவில் இணை இயக்குநர் (மருத்துவம்;) மரு.மனோகரன், துணை இயக்குநர்கள் (சுகாதார பணிகள்) மரு.பழனிச்சாமி (விருதுநகர்), மரு.ராம்கணேஷ் (சிவகாசி), மரு. அமுதா (தொழு நோய்), அரசு மருத்துவர்   துரைராஜ், பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து