முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் அருகே உயிரிழக்கும் மான்களின் எண்ணிக்கை தினம்தோறும் அதிகரிப்பு: மான்கள் சரணாலயம் அமைத்திட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை:

வெள்ளிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2017      மதுரை
Image Unavailable

 திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டை பகுதியில் வாகன விபத்துக்களில் சிக்கியும்,வனவிலங்குகள் தாக்கியும் உயிரிழக்கும் மான்களின் எண்ணிக்கை தினம்தோறும் அதிகரித்து வருவதால் அந்த பகுதியில் வசித்திடும் மான்களை காப்பாற்றிட வசதியாக மான்கள் சரணாலயம் அமைத்திட வேண்டும் என வனத் துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டை,நேசநேரி,கரிசல்காளம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் மான்கள்,முயல்கள்,காட்டுபன்றிகள்,காட்டுப்பூனைகள் மற்றும் எறுப்புதின்னிகள் உள்ளிட்ட ஏராளமான வனஉயிரினங்கள் வசித்து வருகின்றன.சில சமயங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக் கின்றனர்.எனினும் குறிப்பாக சிவரக்கோட்டை கண்மாயிலும் அதனைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதிகளிலும் 50க்கும் மேற்பட்ட ஏராளமான புள்ளிமான்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றது. இந்நிலையில் தண்ணீர் மற்றும் இரை தேடி காட்டுப்பகுதியை விட்டு வெளியேறிடும் மான்களை அப்பகுதியிலுள்ள நாய்கள் துரத்திச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.நாய்களின் துரத்தலால்  மிரண்டு ஓடிடும் மான்கள் ராயபாளையம் விலக்கு-சிவரக்கோட்டை-கள்ளிக்குடி இடையே சென்றிடும் நான்கு வழிச்சாலையை கடந்து செல்ல முற்படும்போது அவ்வழியே அதிவேகத்தில் சென்றிடும் வாகனங்கள் மோதி படுகாயமடைந்து உயிரிழக்கின்றன.கடந்த சில நாட்களில் மட்டும் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதியதில 10க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் விபத்தினால் இறந்துள்ளன.
இதனிடையே மேற்கண்ட பகுதிகளில் இரை தேடி காட்டைவிட்டு வெளியேறிடும் மான்களை அப்பகுதியிலுள்ள நாய்கள் கூட்டமாக விரட்டிச் சென்று கடித்துக் குதறி தின்பதை வழக்கமாக கொண்டுள்ளது.இது போன்று நாய்களின் தாக்குதலுக்கு ஆளாகி இதுவரையில் 8 க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் பலியாகி உள்ளன.சில சமயங்களில் இந்த பகுதியில் நடமாடிடும் சிறுத்தைகள் மான்களை நீண்டதூரம் விரட்டிச் சென்று கொன்று தின்பதாக காட்டில் ஆடு,மாடு மேயப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த சில தினங்களுக்கு முன்பாக கூட சிறுத்தை தாக்கி புள்ளி மானொன்று பாதி தின்னப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் நேற்று காலை சிவரக்கோட்டை கிராமத்தில் கழுத்தில் காயத்துடன் புள்ளிமான் இறந்து கிடந்ததையும்,முன்னாள் சாலையோர உணவகத்தினுள் காலில் காயத்துடன் பெண் புள்ளிமானொன்று கிடந்ததையும் வனத்துறையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புள்ளிமான்கள் நான்குவழிச்சாலையை கடந்து செல்லும் போது வாகனங்கள் மோதியும்,காட்டு விலங்குகள் மற்றும் தெரு நாய்கள் தாக்கி உயிரிழப்பதையும் தடுத்திடும் வகையில்  வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் சூழலில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டை பகுதியில் மான்கள் சரணாலயம் அமைத்திட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இல்லாவிடில் அரிவகை புள்ளிமான்களின் இனம் இந்த பகுதியில் இல்லாமல் போய்விடும் எனவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
2படம் நெட்டில் உள்ளது: படவிளக்கம்: 1.வனவிலங்கு தாக்கியதில் உயிரிழந்த மான்.
2.நான்கு வழிச்சாலையை கடக்க முயன்று வாகனம் மோதியதில் காலில் லேசான காயமடைந்த நிலையில் வனத்துறையினரால் மீட்கப்பட்ட மான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து