பார்லி.யில் நீண்ட அனுபவம் பெற்ற வெங்கையா தற்போது உயர் பொறுப்புக்கு வந்து இருக்கிறார் - பிரதமர் மோடி புகழாரம்

வெள்ளிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2017      இந்தியா
modi 2017 07 01

புதுடெல்லி : பாராளுமன்றத்தில் நீண்ட அனுபவம் பெற்ற வெங்கையா நாயுடு உயர் பொறுப்புக்கு வந்து இருக்கிறார் என்று பிரதமர் மோடி வெங்கையா நாயுடுவை பாராட்டினார்.

துணை-ஜனாதிபதியாக ...

நாட்டின் 13-வது புதிய துணை-ஜனாதிபதியாக நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட வெங்கையா நாயுடு, மாநிலங்களவையை நேற்று நடத்தினார். துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள வெங்கையா நாயுடுவை புகழ்ந்து பிரதமர் மோடி அவையில் உரையாற்றினார்


சுதந்திரத்திற்கு பின்...

பிரதமர் மோடி பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு;-

துணை ஜனாதிபதி சுதந்திரத்திற்கு பின்னர் பிறந்தவர். அவர் பணக்கார குடும்பத்தில் பிறக்கவில்லை. விவசாயி மகன். ஏழைகள் பிரச்னைகளில் கவனம் செலுத்தியவர். மாநிலங்களவையின் செயல்பாடுகள் குறித்து நன்கு அறிந்தவர் வெங்கையா நாயுடு.

புதிய உச்சத்துக்கு...

மிகவும் கீழ்மட்டத்தில் இருந்து உயர்ந்துள்ள வெங்கையா நாயுடு, இந்தியாவை மிகவும் கண்ணியத்தோடு வழிநடத்தி புதிய உச்சத்துக்கு அழைத்துச்செல்வார். மந்திரியாக பதவி வகித்த காலத்தில் ஏழைகளில் நலனில் வெங்கையாநாயுடு அக்கறை செலுத்தினார்.

சிறப்பாக பணியாற்றி...

ஏழை விவசாயியின் மகன் மிக உயர்ந்த பொறுப்புக்கு வந்திருப்பது, இந்தியாவில் இருக்கும்  முதிர்ச்சி பெற்ற ஜனநாயகத்துக்கான சான்று ஆகும். வெங்கையா நாயுடு மாநில அரசியல் மற்றும் மத்திய அரசில் சிறப்பாக பணிபுரிந்துள்ளார். இன்று சாமான்யர்கள் உயர்ந்த பதவியில் இருக்கின்றனர்” இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து