முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.,யில் கோரக்பூர் மருத்துவமனையில் 5 நாட்களில் 60 குழந்தைகள் பலி

சனிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவமனையில் கடந்த 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 60 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ஸிஜன் நிறுத்தம்

மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த இரு தினங்களில் மட்டும் 30 குழந்தைகள் பலியாகியுள்ளனர். மருத்துவமனைக்கு பிராண வாயு விநியோகித்துவந்த தனியார் ஒப்பந்ததாரர் ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தியதன் காரணத்தினாலும் குழந்தைகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை தரப்பில், கடந்த 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 60 குழந்தைகள் பலியாகினர். ஆகஸ்ட் 10, 11 தேதிகளில் மட்டும் 30 குழந்தைகள் பலியாகியிருக்கின்றனர். இவர்களில் 12 பேர் மூளைக் காய்ச்சல் நோய் பாதிப்பு காரணமாக இறந்தனர். எஞ்சியவர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகிக்கப்படாததால் மூச்சுத் திணறல் காரணமாக பலியாகினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் உத்தரவு

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் பலியான சம்பவத்தையடுத்து அந்த மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ள 2 அமைச்சர்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுப்பியுள்ளார். இதனையடுத்து, உத்தரப் பிரதேச சுகாதார அமைச்சர் சித்தார்த்நாத், மருத்துவக் கல்வி அமைச்சர் அசுதோஷ் டண்டன் ஆகியோர் கோரக்பூர் விரைந்துள்ளனர். மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

குலாம் நபி ஆசாத் ஆய்வு

இதற்கிடையில் சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என்.சிங்கும் சென்றுள்ளனர். ஆளும் பா.ஜ.க அரசின் அலட்சியத்தின் காரணமாகவே குழந்தைகள் பலியானதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

வேண்டுகோள்

கோரக்பூர் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் உள்பட 60 குழந்தைகள் பலியான சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என மாநில சுகாதார அமைச்சர் சித்தார்த்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்க்கட்சியினர் உண்மை என்னவென்று வெளியாவதற்கு முன்னதாகவே அவசர கதியில் ஆளும் கட்சி மீது குற்றம் சுமத்தி அறிக்கைகளை வெளியிடுவதாக துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா கண்டனம் தெரிவித்துள்ளார். குழந்தைகள் இறந்த சம்பவத்தால் மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரும் பல்வேறு அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் தொடர்ந்து வந்துசெல்வதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சோதனையான காலம்

இதற்கிடையே, உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு ஆஸ்பத்திரி ஒன்றில் 30 குழந்தைகள் இறந்திருப்பது முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு இது ஒரு சோதனை காலம் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம் விலாஸ் பஸ்வான் கூறுகையில் முதல்வர் யோகி ஆதித்தியா நாத்துக்கு இது சோதனையான நேரமாகும். இதுகுறித்து ஒரு கால நிர்ணயத்திற்குள் விசாரிக்க வேண்டும் என்றார். தலைநகர் டெல்லியில் அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

உயர்மட்ட விசாரணை

யோகி ஆதித்யாநாத் தொகுதியான கோரக்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஆக்ஸிஜன் இல்லாமல்  இந்த சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சம்பவத்தை முதல்வர் யோகி மிகவும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பார். இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தி ஒரு வார காலத்திற்குள் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பஸ்வான் கேட்டுக்கொண்டார். உத்திரப்பிரதேசத்திலும் வேறு சில மாநிலங்களிலும் அரசு ஆஸ்பத்திரிகள் இதேநிலையில்தான் உள்ளன என்று ராம் விலாஸ் பஸ்வான் மேலும் கூறினார். பாரதிய ஜனதா கூட்டணியில் லோக் ஜனசக்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து