கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் அதிக வயதான முதியவர் மரணம்

சனிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2017      உலகம்
world older death 2017 8 12

ஜெருசலேம் : கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் அதிக வயதான முதியவர் கிறிஸ்டல், தனது 113 வயதில் காலமானார்.

113 வயதில் ...

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டல், உலகின் அதிக வயதான நபராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்றவர். கிறிஸ்டல், தனது 113 வயதில் காலமானார். 1903-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி பிறந்த அவர், 114-வது பிறந்தநாளை கொண்டாட இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ள நிலையில் கிறிஸ்டல் உயிரிழந்துள்ளார்.


32 கொள்ளு பேரன்...

இஸ்ரேல் நாட்டின் ஹாய்பா நகரின் ஜர்னோவ் பகுதியில் கிறிஸ்டல் வசித்து வந்தார். தனது 17-வது வயதில் போலாந்து நாட்டின் லாட்ஸ் பகுதிக்கு இடம்பெயர்ந்த அவர், அங்கு திருமணம் முடித்து சாக்லேட் தொழிற்சாலை ஒன்றினை நடத்தி வந்தார்.  பின்னர், முதல் மனைவியை இழந்த நிலையில், மீண்டும் 1950-களில் இரண்டாவது மனைவியுடன் இஸ்ரேல் நாட்டின் ஹாய்பாவிற்கு திரும்பினார். கிறிஸ்டனுக்கு இரண்டு குழந்தைகளும், 9 பேரன்கள் மற்றும் 32 கொள்ளு பேரன்களும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து