முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

54.3 சதவீதம் வாக்குகள் பெற்று அமோக வெற்றி: கென்யா அதிபராக கென்யட்டா மீண்டும் தேர்வு

சனிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

நைரோபி : கென்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் உகுரு கென்யட்டா 54.3 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் கென்யட்டா மீண்டும் அதிபராக பொறுப்பேற்கிறார்.

மீண்டும் போட்டி

ஆப்பிரிக்காவில் உள்ள கென்யாவில் உகுரு கென்யட்டா அதிபராக பதவி வகித்தார். அவரது பதவிக்காலம் முடிவடைந்ததை யொட்டி அங்கு அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் அதிபர் கென்யட்டா மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சி சார்பில் ரெய்லா ஒடிங்கா களம் இறங்கினார். சமீபத்தில் ஓட்டு பதிவு நடந்தது.

முறைகேடு புகார்...

இதையடுத்து நடந்த வாக்கு எண்ணிக்கையில் அதிபர் கென்யட்டா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவர் 54.3 சதவீதம் வாக்குகளும், ஒடிங்காவுக்கு 44.7 சதவீதம் வாக்குகளும் கிடைத்தன. இதை எதிர்க்கட்சி வேட்பாளர் ஒடிங்கா ஏற்கவில்லை. தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறினார். அதை தொடர்ந்து கென்யா தலைநகர் நைரோபி, கிசுமு, கிபேரா உள்ளிட்ட பல நகரங்களில் கலவரம் மூண்டது. தீவைப்பு சம்பவங்களும் நடந்தன.

மீண்டும் அதிபராக ...

கலவரத்தை அடக்கும் பணியில் ராணுவமும், போலீசாரும் ஈடுபட்டனர். நாட்டு மக்கள் அமைதி காக்கும்படி அதிபர் கென்யட்டா வேண்டுகோள் விடுத்தார். எதிர்க்கட்சி தலைவர் ஒடிங்காவும் அமைதி காக்கும்படி வலியுறுத்தினார். அதை தொடர்ந்து கலவரம் கட்டுக்குள் அடங்கியது. எனவே கென்யட்டா வெற்றி பெற்றதாக தேர்தல் கமி‌ஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் கென்யட்டா மீண்டும் அதிபராக பொறுப்பேற்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து