முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதச்சார்பற்ற நாடான இந்தோனேசியாவில் சீன கடவுளின் சிலை

சனிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

ஜகர்தா : இந்தோனேசியாவின் துபான் நகரில் ஒரு கோவில் வளாகத்தில் சீனக் கடவுளின் 100 அடி உயரச் சிலை நிறுவப்பட்டுள்ளதற்கு அப்பகுதி முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

100 அடி உயரத்தில் ...

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாநிலத்தில் துபான் நகரில் சீனர்களின் கோவில் ஒன்று  உள்ளது. இந்தக் கோவிலில் ஏற்கெனவே இருக்கும் கடவுளர் சிலைகள் போகப் புதிதாக 100 அடி உயரத்தில் குவான் யு என்கிற கடவுளின் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் எதிர்ப்பு

டிராகன், பாம்பு ஆகியவற்றுடன் வாள், அரிவாள் ஆகிய ஆயுதங்களையும் ஏந்தியபடி அமைக்கப்பட்டுள்ள இந்த மிகப்பெரிய சிலைக்கு அப்பகுதி முஸ்லிம்களும் தேசியவாதிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் சிலை நிறுவப்பட்டுள்ள கோவிலைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் வாழும் நாடு இந்தோனேசியா ஆகும்.

மோதல்கள் அதிகரிப்பு

மதச்சார்பற்ற நாடான இந்தோனேசியாவில் அனைத்து மதத்தினருக்கும் வழிபாட்டு உரிமைகள் வழங்கப்பட்டிருந்தாலும் அண்மைக்காலமாக ஒரு சில மதத்தினர் இடையே மோதல்கள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து