ராணுவம் மீது விமர்சனத்திற்கு மத்திய அமைச்சர் பிரதான் கண்டனம்

சனிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2017      இந்தியா
dharmendra-pradhan 2017 08 12

பனாஜி, இந்திய ராணுவத்தினர்களை விமர்சனம் செய்வதற்கு மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உலகத்திலேயே இந்திய ராணுவம்தான் அதிக அளவு விமர்சனத்திற்கு ஆளாகுகிறது என்று அவர் வருத்தப்படக்கூறினார்.

முன்பெல்லாம் அரசியல்வாதிகள் மீதுதான் விமர்சனம் செய்யப்படும். அந்த விமர்சனமானது மிகவும் சிரமங்களுக்கிடையேயும் கஷ்டங்களுக்கிடையேயும் பணியாற்றும்  நமது முப்படைகள் மீதும் பாதுகாப்பு ஏஜன்சிகள் மீதும் நீடித்துள்ளது என்று மத்திய பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் தர்மேந்திரா பிரதாப் வருத்தப்படக்கூறினார்.

கோவா மாநில தலைநகர் பனாஜி நகருக்கு அருகே வாஸ்கோ என்ற இடத்தில் கடற்கரை பாதுகாப்பு கப்பல் போக்குவரத்தை தொடங்கிவைத்து பேசிய பிரதான் மேற்கண்டவாறு கூறினார்.


இந்திய ராணுவ முப்படைகளின் அர்ப்பணிப்பு தன்மையை புரிந்துகொள்ளாதவர்களும் தெரியாதவர்களும்தான் அவர்களை விமர்சனம் செய்கிறார்கள். நாம் ஒவ்வொரு நாளும் வீடுகளில் அமைதியாக ஆழ்ந்து தூங்குகிறோம். ஆனால் ராணுவ வீரர்களுக்கு ஒவ்வொரு நாளும் மிகவும் ஆபத்தான நாளாக இருக்கிறது. இந்த நிலையில் பாதுகாப்பு பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபற்றி தெரியாதவர்கள்தான் நமது படையினர் மீது விமர்சனம் செய்கிறார்கள்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடாகும். ஆரம்பத்தில் அரசியல்வாதிகள்தான் விமர்சனத்திற்கு ஆளானார்கள். தற்போது இந்தியாவின் முப்படைகளும் விமர்சனத்திற்கு ஆளாகின்றன. இதற்குகாரணம் இந்திய ராணுவத்தின் அர்ப்பணிப்புத்தன்மையை அவர்கள் தெரிந்துகொள்ளாமல் இருப்பதுதான். ராணுவத்தினர்களின் சேவையையும் மதிப்பையையும் புரிந்துகொள்ளாதது துரதிர்ஷ்டவசமாகும். ராணுவத்தினர்களை நாம் மதிக்க வேண்டும். அதற்கு அவர்கள் தகுதியானவர்கள். விமர்சனம் இருக்கலாம். அதற்கு சரியான காரணம் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் பிரதான் மேலும் கூறினார்.

கடற்கரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த கப்பலின் பெயர் செளரியா. கோவா கப்பல் லிமிடெட் கம்பெனியால் கட்டப்பட்டது. இது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாகும். இந்த கப்பலானது இரண்டு மிஷின்கள் பொருத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர் மற்றும் 5 படகுகளை ஏற்றிச்செல்லக்கூடியது. மேலும் நவீன தகவல் தெடார்பு தொழில்நுட்ப வசதியும் உள்ளது.

இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து