மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் இணைகிறது - பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தகவல்

சனிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2017      இந்தியா
Nitish Kumar 2017 05 15

புதுடெல்லி : மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் சேருகிறது என முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

ஒருமித்த கருத்து

பீகாரில் முதல்வர் நிதீஷ்குமார் பா.ஜனதாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளார். இந்நிலையில், டெல்லி சென்ற நிதீஷ்குமார் பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


மரியாதை நிமித்தமாக நான் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினேன். இம்மாத இறுதியில் மீண்டும் டெல்லி வர இருக்கிறேன். அப்போது பீகார் மாநில வளர்ச்சிப் பணிகள் குறித்து பேச இருக்கிறேன். எங்கள் கட்சியின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது என்று முடிவு எடுத்தாகி விட்டது. இதுநான் தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவு அல்ல. கட்சியில் ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவுதான். இதில் யாருக்காவது மாற்றுக் கருத்து இருக்கும் என்றால் அவர்கள் தங்கள் விருப்பப்படி முடிவு எடுக்கலாம்.

மத்திய அமைச்சரவையில்...

இவ்வாறு கூறிய அவரிடம் மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் இணைய வாய்ப்பு உள்ளதா? என்று நிருபர்கள் கேட்டதற்கு நிதீஷ்குமார் கூறியதாவது:-

பீகாரில் பா.ஜனதாவும் ஐக்கிய ஜனதா தளமும் மந்திரி சபையில் இடம் பெற்றுள்ளது. எனவே மத்திய மந்திரிசபையில் இடம் பெறுவது என்பது இயல்பான வி‌ஷயம்தான் என்றார். ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு இப்போது பாராளுமன்ற மக்களவையில் 2 எம்.பி.க்களும், மேல்-சபையில் 10 எம்.பி.க்களும் உள்ளனர்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் வருகிற 19-ம் தேதி பாட்னாவில் நடக்கிறது. அப்போது பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இணைவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து