உ.பி.அரசு ஆஸ்பத்திரியில் 30 குழந்தைகள் பலி: முதல்வர் யோகிக்கு சோதனை காலம் - ராம்விலாஸ் பஸ்வான் கருத்து

சனிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2017      இந்தியா
ram vilas paswan(N)

லக்னோ, உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு ஆஸ்பத்திரி ஒன்றில் 30 குழந்தைகள் இறந்திருப்பது முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு இது ஒரு சோதனை காலம் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் ஆஸ்பத்திரியில் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் திடீரென்று ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளில் 48 மணி நேரத்தில் 30 பேர் இறந்துவிட்டனர். இது மாநிலத்தில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம் விலாஸ் பஸ்வான் கூறுகையில் முதல்வர் யோகி ஆதித்தியா நாத்துக்கு இது சோதனையான நேரமாகும். இதுகுறித்து ஒரு கால நிர்ணயத்திற்குள் விசாரிக்க வேண்டும் என்றார்.

தலைநகர் டெல்லியில் அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். யோகி ஆதித்யாநாத் தொகுதியான கோரக்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஆக்ஸிஜன் இல்லாமல்  இந்த சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சம்பவத்தை முதல்வர் யோகி மிகவும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பார். இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தி ஒரு வார காலத்திற்குள் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பஸ்வான் கேட்டுக்கொண்டார்.


உத்திரப்பிரதேசத்திலும் வேறு சில மாநிலங்களிலும் அரசு ஆஸ்பத்திரிகள் இதேநிலையில்தான் உள்ளன என்று ராம் விலாஸ் பஸ்வான் மேலும் கூறினார். பாரதிய ஜனதா கூட்டணியில் லோக் ஜனசக்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து