அ.தி.மு.க அணிகள் இணைப்பு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி நல்ல முடிவை எடுப்பார் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்

சனிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2017      தமிழகம்
dindigul Srinivasas 2017 8 12

சென்னை : அ.தி.மு.க அணிகள் இணைப்பு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்றும், 420 என்று தினகரன் கூறியதை பேச்சுக்களை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

தினகரன் 420 என்று கூறியதை பெரிதுப்படுத்த வேண்டாம் அது வாய் தவறி வந்த வார்த்தை என்றும் அ.தி.மு.கவில் தற்போது நடந்து வருவது அண்ணன், தம்பிகளுக்கு இடையான சண்டை தான் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். கோவையில் மேற்கு தொடர்ச்சி மலை வனத்துறை சரகங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

விரைவில் தீர்வு


விரைவில் எல்லா பிரச்சனைகளும் தீர்வு ஏற்படும். தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நல்ல முடிவுகளை எடுப்பார். இந்த ஆட்சி அடுத்த நான்கு ஆண்டுகள் நடைபெறும். சுயலாபத்துக்காக ஒருவருக்கொருவர் காழ்ப்புணர்ச்சி கொண்டு பேசுவது சரியல்ல. தவறான செய்திகளை யார் தெரிவித்தாலும் அது தவறு அதனை திருத்துக் கொள்ள வேண்டும். 420 என்று கூறியதை பெரிதுப்படுத்த வேண்டாம். அது வாய் தவறி வந்த வார்த்தை. இது எல்லாம் காலப்போக்கில் மாறும். தி.மு.க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதனை விழ்த்தி வெற்றி பெறுவோம் ஒ.பன்னீர்செல்வத்துக்கு துனை-முதல்வர் பதவி என்று பத்திரிக்கைகளில்தான் வந்துள்ளன. நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை. முதல்வர் எடப்பாடியின் கருத்துகளை பின் பற்றியே செயல்பட்டு வருகிறோம் இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ...

இந்நிலையில், அ.தி.மு.க முன்பே பல சோதனைகளை சந்தித்து வெற்றி பெற்ற அனுபவம் கொண்டது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். கோவையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது, அ.தி.மு.கவுக்கு இதற்கு முன்னரே பல சோதனைகளைச் சந்தித்த அனுபவம் உண்டு அதனால் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்தை எளிதாக எதிர்கொள்ளும். உதகையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம். பிற வங்கிகளுக்கு இணையாக வருமான வரி செலுத்தும் அளவுக்கு கூட்டுறவு வங்கிகள் வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து