தவான், ராகுல் அபார ஆட்டத்தால் இந்தியா ரன் குவிப்பு

சனிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2017      விளையாட்டு
rahul   dawan

பல்லேகலே: இலங்கைக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் தவான் சதம் மற்றும் ராகுல் அரை சதத்தால் முதல் நாளில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரை ஏற்கனவே இந்திய அணி 2-0 என கைப்பற்றியது. இரு அணிகள் மோதும், மூன்றாவது டெஸ்ட் போட்டி, கண்டியில் நேற்று துவங்கியது. இதிலும் இந்திய அணிதான் 'டாஸ்' வென்றது. இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, வழக்கம்போலவே, முதலில், பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் ராகுல் களமிறங்கினர்.
இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா வீரர்கள்
ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி, அஜின்கியா ரகானே, அஷ்வின், சகா, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ்,முகம்மது சமி, உமேஷ் யாதவ்,


இலங்கை வீரர்கள்
உபுல் தரங்கா, திமுத் கருணரத்னே, குசல் மென்டிஸ், தினேஷ் சண்டிமால், ஏஞ்சலே மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா, டில்ருவன் பெரேரா, மலிண்டா புஷ்பகுமரா, லக்‌ஷன் சண்டகன்,விஷ்வ பெர்னோண்டா, லகிரு குமாரா.

குல்தீப் யாதவ்
இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. சஸ்பெண்டு காரணமாக விளையாட முடியாத ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக சுழற்பந்து வீரர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். அவருக்கு இது 2-வது டெஸ்ட் ஆகும். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் நடந்த டெஸ்டில் விளையாடினார். இதில் 4 விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

இலங்கை அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஹெராத், நவன்பிரதீப், தனஞ்செயா டிசில்வா ஆகியோருக்கு பதிலாக லக்கு குமாரா, விஷ்வா பெர்னாண்டோ, லக்சன் சன்டகன் இடம் பெற்றனர்.

தவானும், லோகேஷ் ராகுலும் தொடக்க வீரர்களாக விளையாடினார்கள். இருவரும் மிகவும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். முதல்நாள் உணவு இடைவேளைவரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 134 ரன்கள் குவித்தது. லோகேஷ் ராகுல் 67 ரன்களும், ஷிகார் தவான் 64 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் நாள் முடிவில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 329 ரன்களை குவித்துள்ளது.

சாதனை படைத்த கே.எல்.ராகுல்
டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 7 அரைசதத்தைப் பதிவு செய்து சாதனை படைத்தார் கே.எல்.ராகுல்.

இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி கண்டியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி. முதலில் களமிறங்கிய ராகுல், தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான வேகத்தில் ரன்கள் குவித்தனர். ராகுல் 67 பந்துகளில் தனது 9ஆவது அரைசதத்தை அடித்தார். அதுமட்டுமல்லாது டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 7ஆவது அரைசதத்தைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த எவர்டான் வீக்ஸ், ஷிவநாரன் சந்தர்பால், ஜிம்பாவே அணியை சேர்ந்த ஆண்டி ஃப்ளவர், இலங்கை அணியை சேர்ந்த குமார் சங்கக்காரா, ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த கிறிஸ் ரோஜர்ஸ் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். தற்போது டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 7 அரைசதத்தைப் அடித்து இந்த சாதனையை சமன் செய்துள்ளார் கே.எல்.ராகுல். 

இதையடுத்து சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராகுல் 135 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 188 ரன்களை எடுத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து