முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று பாகிஸ்தான் சுதந்திர தினம்: சீன துணை பிரதமர் பங்கேற்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

பீஜிங் : பாகிஸ்தானின் சுதந்திர தின விழாவில் சீனாவின் துணை பிரதமர் வாங் யாங் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெளியுறவு அமைச்சகம்

பாகிஸ்தானின் சுதந்திர தினம் வரும் இன்று அந்நாட்டில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சீனாவிலிருந்து முக்கிய தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என பாகிஸ்தான் அதிபர் மம்மூத் ஹுசைன் மற்றும் புதிய பிரதமர் அப்பாஸி ஆகியோர் அழைப்பு விடுத்திருந்தனர். அதற்கேற்ப, சீனாவின் துணை பிரதமர்களில் ஒருவரான வாங் யாங் பங்கேற்க உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

ஒப்பந்தங்கள் கையெழுத்து

சீனாவின் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியில் வாங் யாங் மூத்த தலைவராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுதந்திர தின சிறப்பு விருந்தினராக வரும் வாங் யாங், இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான சில ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து