முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏவுகணை திட்டத்திற்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்ய ஈரான் பார்லி.யில் தீர்மானம் நிறைவேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

டெஹ்ரான் : அமெரிக்காவின் தடைகளை அடுத்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ஏவுகணை திட்டத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது.

தீர்மானம்

ஈரானிய நாடாளுமன்றத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி சுமார் 520 அமெரிக்க டாலர்கள் மதிப்பில் நிதியுதவி உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ஏவுகணை திட்டத்திற்கு அமெரிக்க டாலர் 260 மில்லியன்களும் , ஈரானிய புரட்சிகர படைக்கு அதே தொகையில் நிதியுதவியும் அளிக்கப்பட தீர்மானம் உதவுகிறது.

240 பேர் ஆதரவு

நாடாளுமன்றத்தில் இருந்த 244 உறுப்பினர்களில் 240 பேர் அரசின் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இது குறித்து பேசிய அவைத்தலைவர் அலி லாரிஜினி “இதுதான் நமது முதல் நடவடிக்கை என்று அமெரிக்கா உணரட்டும்” என்றார். இந்த ஒதுக்கீடு மூலம் அமெரிக்காவின் தீவிரவாத, சாகச நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியும் என்று தீர்மானம் நிறைவேறிய உடன் அவர் தெரிவித்தார்.

நிறுத்தவில்லை...

ஈரானிய துணை வெளியுறவுது துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி கூறுகையில், “அமெரிக்காவுடன் அமைதி பேச்சு நடத்திய குழு அந்நாட்டின் சமீபத்திய சட்டத்தை எதிர்க்க அரசு மற்றும் வெளியுறவுத் துறை மூலம் இச்சட்டத்திற்கு ஆதரவளிக்கப்படுகிறது” என்றார். அதிபர் ஒபாமா காலத்தில் ஈரானுடன் செய்து கொண்ட அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தப்படி ஈரான் நடந்து கொண்டாலும், ஏவுகணை சோதனைகளை நிறுத்தவில்லை. இதையடுத்து புதிய அதிபர் டிரம்ப் ஈரான் மீது புதிய தடைகளை விதித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து