முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணா நடிக்கும் "களரி"

ஞாயிற்றுக்கிழமை, 13 ஆகஸ்ட் 2017      சினிமா
Image Unavailable

Source: provided

நட்சத்திரா மூவி மேஜிக் என்ற பட நிறுவனம் சார்பில் செனித் கெலோத் தயாரித்திருக்கும் படம் ‘களரி’. இந்த படத்தில் கிருஷ்ணா, வித்யா ப்ரதீப், சம்யுக்தா மேனன், எம் எஸ் பாஸ்கர், ஜெயபிரகாஷ், பிளாக் பாண்டி, சென்றாயன், விஷ்ணு, கிருஷ்ணதேவா, மீரா கிருஷ்ணன், அஞ்சலி தேவி, ரியாஸ் தோஹா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார் கிரண் சந்த். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, பிரபாகர் படத்தை தொகுக்கிறார்.  பிரபல பின்னணி பாடகராக இருக்கும் வி.வி.பிரசன்னா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

கவிஞர் முத்துவிஜயன், கவிஞர் வைரபாரதி, கவிஞர் ப்ரானேஷ், கவிஞர் தினேஷ் ஆகியோர்கள் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். நந்தன் கலை இயக்கத்தை கவனிக்க, சண்டை பயிற்சியை ஸ்டன்னர் ஷாம் மேற்கொள்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் கிரண் சந்த் பேசும் போது,‘ களரி என்றால் தற்காப்பு கலை என்று அனைவரும் கருதுகிறார்கள். ஆனால் களரி என்றால் போர்களம் என்பது தான் பொருள். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரு போர்களம் தான். அதை மையப்படுத்தி தான் இந்த டைட்டில் இருக்கிறது.

கொச்சி மாநகரத்தில் வாத்துருத்தி என்ற ஒரு பகுதி இருக்கிறது. இது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. இப்பகுதியை கதைக்களமாக கொண்டு தான் திரைக்கதையை அமைத்திருக்கிறேன். நடிகர் கிருஷ்ணா இதில் ஒரு சராசரி இளைஞர் கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இவருக்கும், இவருடைய தந்தைக்கும் இடையே தலைமுறை இடைவெளியால் ஏற்படும் சிக்கல்களும், அதைத் தொடர்ந்து நடைபெறும் உணர்ச்சிகரமான நிகழ்வுகளும் தான் படத்தின் கதை.உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டும், காதல், சென்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன் என அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் வகையிலும் ‘களரி ’ உருவாகியிருக்கிறது.’ என்றார்.
நடிகர்கள் கிருஷ்ணா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஷ்ணு, கிருஷ்ணதேவா, பிளாக் பாண்டி, வித்யா ப்ரதீப், சம்யுக்தா மேனன், சென்றாயன், மீரா கிருஷ்ணன், அஞ்சலிதேவி, ரியாஸ்தோஹா மற்றும் பலர்.

தயாரிப்பாளர் -செனித் கெலோத், இணை தயாரிப்பு- சந்தீப் வினோத், சரீன் கெலோத், நிர்வாக தயாரிப்பு- ரஃபிக் காசர்கோடு, சஜீவ் மீரா சாஹிப், எழுத்து & இயக்கம் -கிரண்சந்த், ஒளிப்பதிவு- R .B.குருதேவ், இசை- V.V.பிரசன்னா, எடிட்டிங் - பிரபாகர், கலை- நந்தன், நடனம் -ராஜு பாஸ்கர், சல்சா மணி, சண்டை - ‘ஸ்டன்னர்’ ஷாம், பாடலாசிரியர்கள் -முத்துவிஜயன், வைரபாரதி, ப்ரானேஷ், தினேஷ், தயாரிப்பு நிர்வாகம் -ஷ்யாம் தி ரிபோனித்ராமக்கள் தொடர்பு- யுவராஜ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து