Idhayam Matrimony

தேசிய அளவில் நதிகள் அனைத்தையும் இணைக்க ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தேசிய அளவில் நதிகள் அனைத்தையும் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

தமிழகத்தை பொறுத்தவரை அண்டை மாநிலமான கர்நாடகம், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி, காவிரியில் நமக்கு முறையாக தரவேண்டிய தண்ணீரை தர மறுக்கிறது. அதோடு சிறிதளவு வரும் தண்ணீரையும் தடுப்பணை கட்டி தடுக்க முயற்சிக்கிறது. கேரள அரசு முல்லை பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிப்பதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. ஆந்திர அரசும் தண்ணீர் தர தயங்குகிறது. இதன் காரணமாக தமிழகம் நீர் ஆதாரம் இல்லாமல் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கிறது. இதற்கெல்லாம் ஒரு தீர்வு வேண்டுமானால் தேசிய நதிகள் அனைத்தையும் இணைக்க வேண்டும். வடமாநிலத்தில் ஓடும் நதிகளின் தண்ணீர் அதிக அளவு கடலில் வீணாக கலக்கிறது. இவற்றை திருப்பி மற்ற மாநிலங்களின் நதிகளோடு இணைத்தால் பல்வேறு மாநிலங்களின் தண்ணீர் பற்றாக்குறை தீரும், கடலில் கலக்கும் தண்ணீர் 25 சதவீதம் அனைத்து மாநிலங்களுக்கும் கிடைத்தாலே இந்தியா விவசாயத்தில் வளம் கொழிக்கும் நாடாக மாறி விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து