முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திர தினத்தையொட்டி நாளை 454 திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு: தமிழக அரசின் சார்பில் சமபந்தி விருந்து - முதல்வர் எடப்பாடி தலைமையில் அமைச்சர்கள் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 13 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : சுதந்திர தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள 454 திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் விருந்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

சிறப்பு வழிபாடு

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்திய சுதந்திரத் திருநாள் அன்று சிறப்புவழிபாடு மற்றும் பொது விருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிறப்பு திட்டத்தின்படி நிதி வசதி மிக்கதிருக்கோயில்களில் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 15-ம் நாள் 454 திருக்கோயில்களில் அனைத்து சமுதாய மக்களும் பங்கு பெறும்வகையில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில்கலந்துக் கொள்ளும் சேவார்த்திகளுக்கு திருக்கோயில்களில் காணிக்கையாகப்பெறப்பட்டு உபரியாக உள்ள பருத்தி வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட உள்ளன. மாவட்டங்களில் உள்ள திருக்கோயில்களில் மாவட்ட ஆட்சியர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

முதல்வர் பங்கேற்பு

இவ்விழாவில் அனைத்து சமுதாய மக்களும் பங்கு பெற்று சிறப்பிக்க வேண்டுகிறோம். மேலும் சென்னை பெருநகர பகுதிகளில் நடைபெறும் இச்சிறப்புமிகு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சிகளில் சபாநாயகர் தனபால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.

சுதந்திரத் திருநாள் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் பங்கேற்பாளர்கள் விவரம்:-

1. சபாநாயகர் தனபால் - அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை-19.
2. முதல்வர் எடப்பாடி பழனிசாமி - அருள்மிகு சக்திவிநாயகர் திருக்கோயில், கே.கே.நகர்.
3. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்- அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில்,திருவல்லிக்கேணி.
4. அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் - அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில்,திருவான்மியூர்,
5. அமைச்சர் செல்லூர் கே.ராஜூ - அருள்மிகு முண்டகக் கண்ணியம்மன் திருக்கோயில்,மயிலாப்பூர்.
6. அமைச்சர் தங்கமணி - அருள்மிகு காளிகாம்பாள் உடனுறை கமடேஸ்வரர் திருக்கோயில், தம்பு செட்டி தெரு.
7. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி - அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர்.
8. அமைச்சர் ஜெயகுமார் - அருள்மிகு சித்திபுத்தி விநாயகர் திருக்கோயில்,ராயப்பேட்டை.
9. அமைச்சர் எம்.சி.சம்பத் - அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயில், மயிலாப்பூர். 
10. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் - அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்.
11. அமைச்சர் கடம்பூர் ராஜூ - அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோயில்.
12. அமைச்சர் கேடி.ராஜேந்திர பாலாஜி - அரண்மனைக்காரன் தெரு, அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில்.
13. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பெசன்ட் நகர், அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயில், ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து