முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிழக்கு ஆப்பிரிக்க நாடு புர்கினோ பாசோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் பலி

திங்கட்கிழமை, 14 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

புர்கினோ பாசோவி: கிழக்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவிலுள்ள துருக்கி உணவு விடுதி ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதல் குறித்து போலீஸார் தரப்பில், “ புர்கினோ ஃபேசோவிலுள்ள துருக்கி நாட்டைச் சேர்ந்த உணவு விடுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை இரவு தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதில் உணவு விடுதியிலிருந்த 17 பேர் பலியாகினர். இதில் பல வெளி நாட்டவரும் அடக்கம்.

மேலும் இந்தத் தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர். தீவிரவாதிகளுக்கு எதிராக போலீஸாரும் பதில் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளுடனான இந்தச் சண்டை சுமார் ஏழு மணி வரை நடைபெற்றது" என்றார். தாக்குதல் நடத்திய தீவிரவாதி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இந்தத் தாக்குதலை ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து