முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வுக்கு குஜராத் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு - கவர்னரிடம் மனு

திங்கட்கிழமை, 14 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

காந்திநகர்: நீட் தேர்வானது குஜராத் மாநில பாடப்பிரிவுக்கு எதிரானது என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில கவர்னர்  கோஹ்லியிடம் காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்தனர்.

நாடு முழுவதும் நீட் தேர்வை இந்த ஆண்டு முதல் மத்திய அரசு கட்டாயமாக்கியது. மருத்துவ சேர்க்கைக்கு தேசிய தகுதி காண் தேர்வு எனப்படும் நீட் தேர்வு கட்டாயமாக்கியதால் கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்று பெரும்பாலான மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் எதிர்ப்புகளையும் மீறி அந்த தேர்வு கடந்த மே மாதம் நாடு முழுவதும் நடைபெற்றது. இதை லட்சக்கணக்கான மாணவர்கள் எதிர்கொண்டனர். தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க தயார் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து மத்திய அரசிடம் தமிழக அரசு அவசர சட்ட வரைவை இன்று சமர்ப்பித்தது. இந்நிலையில் நீட் தேர்வு மாநில பாடப்பிரிவு மாணவர்களுக்கு எதிரானது என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் காங்கிரஸ் தலைவர்கள் அம்மாநில கவர்னர் கோஹ்லியிடம் மனு அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து