முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியாவிலிருந்து இரும்பு இறக்குமதி: நிறுத்துகிறது சீனா

திங்கட்கிழமை, 14 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

Source: provided

பெய்ஜிங் : வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளதையொட்டி அந்த நாட்டில் இருந்து இரும்பு மற்றும் இரும்பு தாது இறக்குமதி செய்வதை இன்றுமுதல் சீனா நிறுத்துகிறது.

அணு ஆயுதம் மற்றும் அணு ஏவுகணை சோதனையில் வடகொரியா தீவிரம் காட்டி வருகிறது. இதனையொட்டி வடகொரியா மீது மீண்டும் கடும் பொருளாதார தடை விதிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு சபையில் அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றியது.

இந்த தீர்மானத்திற்கு வடகொரியாவின் தீவிர ஆதரவு நாடுகளான ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளும் ஆதரவு கொடுத்தன. மேலும் அணு ஆயுத சோதனையில் வடகொரியா ஈடுபட்டு வருவதை சீனா தனது செல்வாக்கை பயன்படுத்தி நிறுத்த வேண்டும் என்றும்  அமெரிக்கா வலியுறுத்தி கேட்டுக்கொண்டது.

இதனையொட்டி வடகொரியாவில் இருந்து இரும்பு மற்றும் இரும்பு தாது பொருட்கள் இறக்குமதி செய்வதை இன்றுமுதல் நிறுத்தப்படும் என்று சீனா வர்த்தகத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இப்படியெல்லாம் வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்படலாம் என்று சீனாவுக்கு முன்கூட்டியே தெரியும்.

அதனால் தேவையான அளவுக்கு இரும்பு மற்றும் இரும்பு தாது, நிலக்கரி ஆகியவற்றை தேவையான அளவுக்கு வடகொரியாவிடமிருந்து சீனா இறக்குமதி செய்திருந்தாலும் செய்திருக்கலாம். சீனாவுடனான வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தி விடலாம் என்ற அச்சத்தில்தான் வடகொரியா மீது பொருளாதார தடைக்கு சீனா ஆதரவு அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து