முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் பலி: உ.பி. அரசுக்கு மனித உரிமை கமிஷன் நோட்டீசு

திங்கட்கிழமை, 14 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி :  உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் பலியானதற்கு விளக்கம் அளிக்கும்படி உத்தரப்பிரதேச மாநில பாரதிய ஜனதா அரசுக்கு தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீசு அனுப்பியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளில் 70 பேர் இறந்துவிட்டனர். இதற்கு காரணம் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று கூறப்படுகிறது. ஆக்ஸிஜன் வாங்கியதற்கு சுகாதாரத்துறை கட்டணம் செலுத்தாததால்தான் ஆக்ஸிஜன் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மாநிலத்தின் முக்கிய நகரான கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மட்டும் 30 குழந்தைகள் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. கோரக்பூர் பாராளுமன்ற தொகுதியில் இருந்துதான் முதல்வர் யோகி ஆதித்யா நாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது தொகுதியிலேயே இப்படி ஒரு சோக சம்பவம் நடந்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில் குழந்தைகள் இறப்புக்கு விளக்கம் அளிக்கும்படி மாநில அரசுக்கு தேசிய மனித உரிமை கமிஷன் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது. மேலும் அந்த நோட்டீசில், குழந்தைகள் இறப்புக்கு ஒட்டுமொத்த நிர்வாகத்தின் மெத்தனப்போக்குதான் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகள் இறப்பால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தார்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள விபரத்தை அளிக்கும்படியும் தவறு செய்துள்ள அதிகாரிகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் 4 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாநில தலைமை செயலாளருக்கும் தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீசு அனுப்பியுள்ளது. கட்டணம் செலுத்தாததால்தான் ஆக்ஸிஜன் சப்ளை துண்டிக்கப்பட்டது என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருப்பது குறித்து மனச்சாட்சிப்படி விளக்கம் அளிக்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு சுகாதாரத்துறை, மருத்துவமனைகள் நிர்வாகம், மருத்துவ கல்வி நிர்வாகத்தின் மெத்தனப்போக்குதான். குழந்தைகள் பலியாகி இருப்பது வாழ்வு உரிமையை மீறியதாகும்.

கடந்த 30 ஆண்டுகளில் கிழக்கு உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஜப்பான் நோய் மற்றும் தொற்றுநோய்களால் 50 ஆயிரம் பேர் பலியாகி இருக்கிறார்கள். இறந்தவர்களில் பெரும்பாலோனோர் கோரக்பூர் மாவட்டத்தில்தான். கோரக்பூர் அரசு மருத்துவமனையில் மட்டும் கடந்த 8-ம் தேதி முடிய 124 பேர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. மாநிலத்தில் கடந்தாண்டு 641 குழந்தைகளும் 2015-ம் ஆண்டு 491 பேரும் இறந்திருப்பதாக தேசிய மனித உரிமை கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து