முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கோட்டையில் இன்று 125 கோடி இந்தியர்களின் குரலாக ஒலிக்கப் போகும் மோடியின் சுதந்திர தின உரை

திங்கட்கிழமை, 14 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: சுதந்திர தினவிழாவில் என்ன பேச வேண்டும் என்பது குறித்து 9000 ஆலோசனைகள் பிரதமர் மோடிக்கு வந்துள்ளன. ஆகையால் இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் 125 கோடி மக்களின் குரல்களும் செங்கோட்டையில் ஒலிக்கும்.

பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் இந்திய மக்களுடன் வானொலியில் உரையாடி வருகிறார். கடந்த ஜூலை 30-ஆம் தேதியில் மான்கிபாத்  நிகழ்ச்சியில் பேசுகையில், ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தினவிழாவில் நான் எது குறித்து உரையாற்ற வேண்டும் என மக்கள் ஆலோசனைகளை அளிக்க வேண்டும். அதன் மூலம்ம் செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுடன் நான் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

நான் வெறும் கருவிதான்
செங்கோட்டையில் உரையாற்றப் போவது வெறும் ஒரே ஒரு நபர் மட்டும் அல்ல, இந்த 125 கோடி மக்களின் குரலையும் பிரதிபலிக்கும் கருவியாக நான் செயல்படுவேன் என்று மோடி கூறியிருந்தார்.

9,000 ஆலோசனைகள்
இதைத் தொடர்ந்து நரேந்திர மோடியின் செயலிக்கும், மத்திய அரசின் இணையதளத்துக்கும் ஆயிரக்கணக்கான ஆலோசனைகள் வந்தன. இதுவரை மோடிக்கு 9,000 ஆலோசனைகள் வந்து சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

71-ஆவது சுதந்திர தினம்
அவற்றுள் கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், டிஜிட்டல்மயம், பெண் கல்வி ஆகியவை குறித்த ஆலோசனைகளே அதிகம் இடம்பெற்றிருந்தன. நாட்டின் 71-ஆவது சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது

பிரதமர் உரை
இதனால் நாளை செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து அவர் உரையாற்றவுள்ளார். அப்போது நம்நாட்டு மக்கள் கூறிய ஆலோசனைகளின் பேரில் மோடி உரையாற்றுவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து