முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தியாகி விஸ்வநாததாஸ் தலைமையில் இந்திய திருநாட்டின் விடுதலைக்காக துணிவுடன் போராடிய திருமங்கலம் ஸ்ரீ சுபாஷ்பாபு வாலிபர் சங்கம்

திங்கட்கிழமை, 14 ஆகஸ்ட் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- 1938ம் ஆண்டில் இந்திய தாய்த்திருநாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேய அடக்கு முறைகளை எதிர்த்து வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தலைமையில் வீரமுடன் போராடிய திருமங்கலம் ஸ்ரீசுபாஷ்பாபு வாலிபர் சங்கம் குறித்த தகவல்களும் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த பல்வேறு விடுதலைப்போராட்ட தியாகிகளின் பெயர்களும்   வீரத்தியாகி விஸ்வநாததாஸ் எழுதிய கடிதத்தின் மூலமாக தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்திய தாய்த்திருநாட்டிற்கு விடுதலை வாங்கிக்கொடுத்தே தீரவேண்டும் என்று மக்கள் உணர்ச்சிப் பிளம்பாக போராடிக் கொண்டிருந்த சமயம் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரை தலைமையிடமாகக் கொண்டு வீரத்தியாகி விஸ்வநாததாஸ் அவர்களின் தலைமையில் 1938ம் ஆண்டில் கட்டுக்கோப்பான தொண்டர்படையுடன்   கூடிய ஸ்ரீசுபாஷ்பாபு வாலிபர் சங்கம் என்ற அமைப்பு ஆங்கிலேயர்களின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டியபடி இருந்துள்ளது.சுதந்திரப்போராட்டத்தின் போது பல்வேறு அமைப்புக்கள், தனிமனிதர்கள், கூட்டணிகள்,தொண்டர்படைகள்,மன்னர்கள்,ஜமீன்தார்கள் என பல்வேறு தரப்பட்டவர்களும் களம் கண்டிருந்த நிலையில் திருமங்கலம் நகரில் 1938ம் ஆண்டு செயல்பட்டுவந்த    ஸ்ரீசுபாஷ்பாபு வாலிபர் சங்கம் ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளை எதிர்த்து வீரமுடன் போராடி வந்துள்ளது.
இந்த சங்கத்தின் தலைவராக வீரத்தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ் அவர்களும் பொக்கிஷதாரராக தியாகி.ஜி.வெங்கிடாத்திரி நாயுடுவும்,காரியதரிசிகளாக எஸ்.வி.சுப்பிரமணியன் மற்றும் எ.சிதம்பரம் ஆகியோர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தைரியமுடன் செயல்பட்டு வந்துள்ளனர்.நாட்டின் சுதந்திரத்தை வென்றெடுக்க ஆயதப்படைகளுடன் போராடிய சுபாஷ்சந்திர போஸின் வீரத்தை பறைசாற்றிடும் வகையில் சுபாஷ் என்ற பெயர் முதலாவதாகவும் அஹிம்சை வழியில் சுதந்திரத்திற்கா போராடிய காந்தியடிகளின்  அழைப்புப் பெயரான பாபுஜியை பாபு என்ற பெயரில் இரண்டாவதாகவும் இணைத்து  வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தனது தலைமையில்  ஸ்ரீசுபாஷ்பாபு வாலிபர் சங்கத்தை துவக்கியுள்ளார்.இந்த சங்கத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட வாலிபர்கள் நேரடி உறுப்பினர்களாகவும்,ஆயிரக்கணக்கானோர் மறைமுக தொண்டர்களாகவும் இணைந்துள்ளனர்.
இந்த சங்கத்தின் பிண்ணனியில் தான் தியாகி விஸ்வநாததாஸ் தனது உணர்ச்சி மிகுந்த நாடகங்கள் வாயிலாக மக்களிடையே சுதந்திர வேட்கையை தூண்டி வந்துள்ளார்.அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் சுதந்திரபோராட்டங்களை முன்னெடுத்து நடத்திய தீரர் சத்தியமூர்த்தி,வ.உ.சிதம்பரம் பிள்ளை,காமராஜர் போன்றோரிடம் மிகவும் நெருங்கிப்பழகிய விஸ்வநாததாஸ் வீரம் மற்றும் விவேகத்துடன் வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போராடிடத் தான் இந்த சங்கத்தை துவக்கியுள்ளார்.இவருக்கு பக்கபலமாக திருமங்கலத்தைச் சேர்ந்த ஜி.வெங்கிடாத்திரி நாயுடு,எஸ்.வி.சுப்பிரமணியன்,எ.சிதம்பரம்,ஜமீன்தார் சீமைராஜ் பாண்டியன்,நாடக நடிகர் சங்க அருணாச்சலம்,சுவாமி நித்தியானந்தஅடிகள் போன்றோர் இருந்துள்ளனர்.
அப்போது 1938ம் ஆண்டு நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் திருமங்கலம் ஸ்ரீசுபாஷ்பாபு  வாலிபர் சங்கமும் தன்னை இணைத்துக்கொண்டு தென்னிந்தியா முழவதிலும் தனது தொண்டர் படையைக் கொண்டு கடுமையாக மோதியுள்ளது.குறிப்பாக 1938ம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்து மன்னர் மற்றும் ஆங்கிலேயர் அடக்குமறைகளை எதிர்த்து திருமங்கலம் ஸ்ரீசுபாஷ்பாபு   வாலிபர் சங்கம் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது. அந்நேரம் சங்கத்தின் மதுரை தொண்டர் படையுடன் திருமங்கலத்தைச் சேர்ந்த சிதம்பரமும் ஜமீன்தார் சீமைராஜபாண்டியனும் போராடுவதற்காக சென்றுள்ளனர்.அதில் கைதாகி சிறையிலிருந்த   ஜமீன்தார் சீமைராஜபாண்டியன் ஜெயிலிலே உயிரிழந்து நாட்டிற்காக தனது உயிரை விட்டார்.
இந்த விபரங்களையெல்லாம் தியாகி விஸ்வநாததாஸ் 1938ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் தேதி  தான் எழுதியிருந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.வந்தேமாதரம் அல்லாஹ_அக்பர் என்று மதசார்பற்று துவங்கி திருமங்கலம் ஸ்ரீசுபாஷ்பாபு வாலிபர் சங்கம் என்ற லெட்டர்பேடில் இருந்த அந்த கடிதத்தின் விபரம்: திருவிதாங்கூர் அடக்குமுறை நிலைமை இன்னும் மோசமாகத்தான்   இருந்துகொண்டிருக்கிறது.மதுரை தொண்டர் படையுடன் நமது சங்கத்தின் சார்பாக திருமங்கலத்திலிருந்து சிதம்பரமும்,ஜமீன்தார் சீமைராஜ் பாண்டியனும் சென்றிருந்ததர்கள்.சீமைராஜ் பாண்டியன் அவர்கள் ஜெயிலில் உயிர்நீத்தார்.பத்திரிக்கை வாயிலாக தாங்கள் பார்த்திருக்கலாம்.சிதம்பரம் இன்னும் அங்கிருந்து வரவில்லை.நமது நடிகர் சங்கத்தின் சார்பாக அருணாச்சலம் சென்றிருந்தான்.அரெஸ்ட் செய்து விட்டுவிட்டார்கள்.மதுரைக்கு வந்துவிட்டான்.இன்னும் இரண்டு மூன்று தினங்களில் நானும் சுவாமி நித்தியானந்தஅடிகள் அவர்களும் திருவிதாங்கூர் தலைமையை பார்த்துவர அங்கு  புறப்படுகிறோம்.மற்ற விபரங்கள் தங்கள் கடிதம் பார்த்து.மதுரையில் எல்லோரும் சுகம் என்று அந்த கடிதத்தில் உள்ளது.
இந்த கடிதத்தின் வாயிலாக இந்திய சுதந்திர போராட்டத்தின் போது பங்கேற்றுப் போராடிய சுபாஷ்பாபு  வாலிபர் இயக்கத்தின் பெயர் தற்போது வெளிவந்திருப்பதுடன்  ஆங்கிலேயர்களை எதிர்த்து தீரமுடன் போராடிய திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த    ஜி.வெங்கிடாத்திரி நாயுடு,எஸ்.வி.சுப்பிரமணியன்,எ.சிதம்பரம்,ஜமீன்தார் சீமைராஜ் பாண்டியன்,நடிகர்சங்க அருணாச்சலம்,சுவாமி நித்தியானந்தஅடிகள் மற்றும் மதுரை தொண்டர்படையின் பெயர்கள் வெளியுலகிற்கு உதயமாகியுள்ளது.நாடு சுதந்திரம் பெற்று பல்வேறுதுறைகளில் விஞ்ஞானம் வளர்ந்துள்ள நிலையில் இன்றைய தமிழக இளைஞர்கள் நடிகர்களின் பெயர்களில் ரசிகர் மன்றங்கள் துவங்கியிருப்பதும் கிராமப்பகுதிகளில் வருத்தமில்லா வாலிபர் சங்கங்கள்  அதிகரித்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் எந்தவித ஆதாயமுமின்றி நாட்டின் விடுதலை ஒன்றையே குறிக்கோளாக கொண்டு 1938ம் ஆண்டுகளில் ஆங்கிலேயரை எதிர்த்து வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தலைமையில் கடுமையாகப் போராடிய திருமங்கலம் ஸ்ரீசுபாஷ்பாபு வாலிபர் சங்கம் இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய பொக்கிஷமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து