முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சின்சின்னாட்டி ஓபன் டென்னிஸ்: காயம் காரணமாக மரியா ஷரபோவா விலகல்

திங்கட்கிழமை, 14 ஆகஸ்ட் 2017      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க் : அமெரிக்காவின் சின்சின்னாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் காயம் காரணமாக ரஷ்யாவின் பிரபல வீராங்கணை மரியா ஷரபோவா பாதியிலேயே விலகியுள்ளார்.அமெரிக்காவின் சின்சின்னாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் காயம் காரணமாக ரஷ்யாவின் பிரபல வீராங்கணை மரியா ஷரபோவா பாதியிலேயே விலகியுள்ளார்.

அமெரிக்காவின் சின்சின்னாட்டி நகரில் ஏ.டி,பி டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், உலகம் முழுவதும் உள்ள முக்கிய டென்னிஸ் வீரர், வீராங்கணைகள் பங்கேற்றுள்ளனர். முதல் சுற்று ஆட்டங்களில் விளையாடிய ரஷ்யாவின் மரியா ஷரபோவா ஆட்டத்தின் பாதியிலேயே இடது கையில் காயம் ஏற்பட்டதால் விலகினார்.

பின்னர், காயத்தின் தீவிரம் குறையாததால் முழு தொடர் ஆட்டங்களிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு இதே தொடரில் மரியா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். மேலும், ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதற்காக 15 மாதங்கள் தடையிலிருந்து தற்போது தான் அவர் மீண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து