முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்பாக பணியாற்றிய 16 போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திங்கட்கிழமை, 14 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : சிறப்பாக பணியாற்றிய 16 போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறை அதிகாரிகளுக்கு...

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்டகாவல் அதிகாரிகளுக்குச் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்-அமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்களை வழங்கிட, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

1.கே.வீரமணி, காவல் கூடுதல் கண்காணிப்பாளர், காஞ்சிபுரம். 2.அசோக் நடராஜன், காவல் துணை கண்காணிப்பாளர், பொருளாதாரகுற்றப் பிரிவு, சென்னை. 3.சந்திரசேகரன், காவல் ஆய்வாளர், மதுரை மத்தியகுற்றப் பிரிவு. 4.நாகராஜன், காவல் ஆய்வாளர், சேலம் அம்மாபேட்டை காவல்நிலையம், 5.உமாதேவி, காவல்ஆய்வாளர், குற்றப் பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறை, சென்னை. 6.ஆ.சிவ ஆனந்த், காவல்ஆய்வாளர், குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறை, சென்னை. 7.ஜே.அன்புபிரகாஷ், காவல் ஆய்வாளர், வள்ளியூர். 8. பார்த்திபன், காவல் ஆய்வாளர், நத்தம். 9.ஜே.மலர் கொடி, காவல் ஆய்வாளர், பெரம்பலூர். 10.சுந்தர மூர்த்தி, காவல் உதவி ஆய்வாளர், திருச்சி.

பொது சேவையில் ...

இதேபோன்று, பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்க்கண்ட காவல் துறை அதிகாரிகளுக்கு அவர்களது பணியைப் பாராட்டி, சிறந்தபொதுச் சேவைக்கான தமிழக முதல்- அமைச்சரின் காவல்பதக்கம் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

1.கே.ஜெயந்த் முரளி, கூடுதல் காவல்துறை இயக்குநர், குற்றப் புலனாய்வு துறை. 2.சி.ஈஸ்வர மூர்த்தி, காவல்துறைத் தலைவர், நுண்ணறிவுப் பிரிவு. 3.மயில்வாகணன், காவல் துணை ஆணையர். 4.சந்திர சேகரன், காவல் துணை கண்காணிப்பாளர், ஓமலூர். 5.எஸ். விஜயன், காவல்ஆய்வாளர், பெரியநாயக்கன்பாளையம். 6.சுதா, முதல்நிலை பெண் காவலர்1565, விழுப்புரம் இருப்புப்பாதை காவல் நிலையம். விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பெறுவார்கள்.

மேற்கண்ட விருதுகள், முதல்வர் பங்கேற்கும் சிறப்பு விழாவில் மேற்சொன்ன காவல்துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்படும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து