முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரலாற்றில் முதல் முறையாக மூவர்ணத்தில் ஒளிர்ந்த நயாகரா நீர்வீழ்ச்சி

செவ்வாய்க்கிழமை, 15 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

நயாகரா பால்ஸ் (கனடா),  நயாகரா நீர்வீழ்ச்சியில் ஆகஸ்டு 15ம் தேதி இரவு 10 மணி முதல் பதினைந்து நிமிடங்களுக்கு இந்திய தேசியக்கொடியின் மூவர்ணத்தில் ஒளிக்காட்சி இடம்பெற்றது. நயாகராவை இதற்கு முன் பல்வேறு நிறங்களில் ஒளிர வைத்தாலும், இந்திய தேசியக் கொடி நிறத்தில் ஒளிரவைத்தது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

நயாகரா நீர்விழ்ச்சியில் ஆண்டு முழுவதும் இரவு நேரத்தில் ஒளிக்காட்சி உண்டு. அருவியின் மீது வண்ண விளக்குளால் ஒளி பாய்ச்சப்பட்டு, வண்ண வண்ண அருவி போல் காட்சி தரும். அதற்கு ஏற்றார்போல் இசையும் இசைக்கப்படும்.

குளிர் காலம், கோடை, இலையுதிர்காலம் என ஒவ்வொரு காலத்திற்கு ஏற்ப இந்த ஒளிக்காட்சியின் நேரம் மாறுபடும். சிறப்புக் காரணங்களுக்காக, குறிப்பிட்ட வண்ணங்களில் ஒளிக்காட்சிக்கு அனுமதி உண்டு. இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்று இரவு 10 மணி அளவில், அமெரிக்க கிழக்கு நேரப்படி இந்திய தேசியக் கொடியின் மூவர்ணத்தில் ஒளிக்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.
இது ஏதாவது இந்திய அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்று கேட்ட போது, அந்த தகவல் அரசு ரகசியம் சாரந்த விஷயம். ஆகையால் அது குறித்து விவரம் சொல்ல இயலாது என்று தெரிவித்தார்கள். யார் வேண்டுமானாலும் பணம் செலுத்தி இத்தகைய காட்சிக்கு ஏற்பாடு செய்யலாமா என்று கேட்டபோது , தக்க காரணங்களுடன் அணுகுபவர்களுக்கு, அரசின் நடைமுறைப்படி ஆராய்ந்து உரிய அனுமதி வழங்கிய பிறகே ஒளிக்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்கள்.

அதாவது, வெறுமனே குறிப்பட்ட தொகையை செலுத்தினால் மட்டும் இந்த காட்சி அனுமதிக்கப்படுவதில்லை. கனடா நாட்டின் நயாகரா பூங்கா கமிஷன் மற்றும் ஒளிக்காட்சி வாரியத்தின் கண்காணிப்பில் இந்த ஒளிக்காட்சி நடைபெற்றது.

கனடா நாட்டின் 150 பிறந்த நாள் சமீபத்தில் தான் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் 70 வது சுதந்திர தினத்தை கனடாவும் சிறப்பிக்கும் வகையில் இந்த மூவர்ண ஒளிக்காட்சி அமைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து