முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ வீரர்களின் சாதனைகளை வெளிப்படுத்த புதிய இணையதளம்- மோடி

செவ்வாய்க்கிழமை, 15 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,  நாட்டுக்கு அளப்பரிய சேவையாற்றும் ராணுவ வீரர்களின் சாதனைகளை வெளிப்படுத்த புதிய இணையதளம் தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.

நாட்டின் 71-ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த மோடி ஆற்றிய சிறப்புரை:

ஜி.எஸ்.டி வரி முறை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஜி.எஸ்.டி முறை அமலாவதற்காக பல்வேறு தரப்பினர் உழைத்துள்ளனர்.

பயங்கரவாத ஒழிப்பில் ஒத்துழைக்கும் நாடுகளுக்கு நன்றி. ஜம்மு- காஷ்மீரை சொர்க்க பூமியாக மாற்ற முயற்சிக்க வேண்டும். வன்முறையாலும், துப்பாக்கிச் சூட்டாலும் காஷ்மீரில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.ராணுவ வீரர்களின் சாதனைகளை தெரியப்படுத்த புதிய இணையதளம் தொடங்கப்படும். ஆதார் திட்டம் மூலமாக ஊழல் ஒழியும், வெளிப்படைத்தன்மை ஏற்படும்.

அரசு திட்டங்கள் வேகம் பெற்றுள்ளன. அவை தாமதமானால் ஏழைகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.தொழில்நுட்பம் மூலமாக அரசுக்கும், மக்களுக்கும் இடையே நேரடி தொடர்பு ஏற்பட்டுள்ளது. கூட்டாட்சி முறையால் உதய் உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பான பலனை தந்துள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து