முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

71 வது சுதந்திர தின விழாவில் - மதுரை ஆணையாளர் அனீஷ் சேகர், தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்.

செவ்வாய்க்கிழமை, 15 ஆகஸ்ட் 2017      மதுரை
Image Unavailable

  மதுரை -மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் 71வது சுதந்திர தின விழாவில் ஆணையாளர் ஃ தனி அலுவலர் மரு.அனீஷ் சேகர், தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். இவ்விழாவில் கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் மேனிலைப்பள்ளி, தெற்கு வெளி வீதி மாநகராட்சி ஆரம்பபள்ளி, சாத்தமங்கலம் நடுநிலைப்பள்ளி, பாரதியார் உயர்நிலைப்பள்ளி, வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மாநகராட்சி பள்ளிகளின் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும், பொன்முடியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குழு நாடகமும் நடைபெற்றது. இறுதியில் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை ஆணையாளர் அவர்கள் வழங்கினார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களாக செயல்பட்டு மதுரை மாநகரை சுத்தமாக வைக்க உதவிய தன்னார்வலர்களை சுவச் கிரகி என நியமனம் செய்து அவர்களை பாhராட்டு விதமாக பாராட்டு சான்றிதழ்களும் ஆணையாளர் அவர்கள் வழங்கினார். மண்டலம் எண்.1 தன்னாவலர் எல்.மெய்யப்பன், விதைக்கலாம் அறக்கட்டளை ஆர்.ராஜசேகரன், மண்டலம் எண்.2 வா நண்பா இயக்கத்தை சாhந்;த ஆர்.பாலாஜி, கே.முத்துச்சாமி, பி.மகேந்திரபிரபு, எம்.கார்த்திக், பி.சுரேஷ், வாஸ் இன்டியூட்டிஸ்ட் இயக்குநர் ஆறுமுகம் காளிமுத்து, மண்டலம் எண்.3 மற்றும் 4 மதுரை கல்லூரி என்.என்.எஸ் ஒருங்கிணைப்பாளர் எஸ்.மீனாட்சி, தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி கே.அடைக்கலம், தி.வி.நாகசுமதி, எக்ஸ்னோரா ராஜாராம், தியாகராசர் கலைக் கல்லூரி தி.அருணா ஆகியோர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், மற்றும் மட்கும் குப்பை மட்காத குப்பை என தரம் பிரித்து கொடுத்தல் பணியில் சிறப்பாக பணிபுரிந்த துப்புரவு பணியாளர்கள் மண்டலம் எண்.1 க.பெருமாள், து.ஜெயராமன், மண்டலம் எண்.2 கு.கந்தசாமி, ரா.கண்ணம்மாள், மண்டலம் எண்.3 ச.முத்துக்குமார், மு.கருப்பையா, மண்டலம் எண்.4 மு.வைகைமுத்து, மா.நாகராஜன் ஆகியோர்களுக்கு பாராட்டு சான்றிதழகளையும் ஆணையாளர் அவர்கள் வழங்கினார்.

இவ்விழாவில் துணை ஆணையாளர் ப.மணிவண்ணன், நகரமைப்பு அலுவலர் ஐ.ரெங்கநாதன், உதவி ஆணையாளர் (கணக்கு) கருப்பையா, உதவி ஆணையாளர்கள் அரசு, பழனிச்சாமி. செல்லப்பா, தி.கௌசலாம்பிககை, உதவி ஆணையாளர் (வருவாய்) ஆர்.ரெங்கராஜன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் (தெருவிளக்கு) செந்தில், உதவி நகர்நல அலுவலர் பாத்திப்பன் கல்வி அலுவலர் செல்வராஜ், மாமன்ற செயலாளர் ராஜகோபால், உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து