முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடி அருகே சுதந்திர தினத்தன்றும் கவனிப்பாரற்று காணப்பட்ட காந்தி சிலை

செவ்வாய்க்கிழமை, 15 ஆகஸ்ட் 2017      தேனி
Image Unavailable

போடி, -தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே சுதந்திர தினத்தன்றும் கவனிப்பாரற்று காணப்பட்ட காந்தி சிலையை கண்டு பொதுமக்கள் வேதனையடைந்தனர்.
போடிநாயக்கனூர் அருகே உள்ள போடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அணைக்கரைப்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரில் காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை ஆரம்பத்தில் சிறிதாக இருந்த நிலையில் தேசப்பற்று மிக்க சிலர் காந்தி சிலையை முழு உருவச் சிலையாக பெரிதாக அமைத்தனர். காந்திஜியின் பிறந்த நாள், நினைவு நாள் மட்டுமின்றி குடியரசு தினம், சுதந்திர தினத்தன்றும் சிலையை சுத்தம் செய்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அணைக்கரைப்பட்டியில் உள்ள காந்தி சிலையை யாரும் கண்டுகொள்ளவில்லை. தூசி படிந்து, அழுக்கான நிலையில் சிலையின் சில பாகங்கள் சிதிலமடைந்தும் காணப்பட்டது. இதனை அங்குள்ள ஊராட்சி அலுவலர்களோ, அங்கு கிராம சபைக் கூட்டம் நடத்திய போடி ஊராட்சி ஓன்றிய அலுவலர்களோ கண்டுகொள்ளவில்லை. சுதந்திரத்திற்காக பாடுபட்டு, உயிர் தியாகம் செய்த மகாத்மா காந்திஜியின் சிலை போடி பகுதியிலேயே இக்கிராமத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக இக்கிராம மக்கள் பெருமைபட்ட நிலையில் தற்போது சுதந்திர தினத்தன்றும் புறக்கணிக்கப்பட்டு சிதிலமடைந்த சிலையை கண்டு இக்கிராம மக்கள் வேதனை அடைந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து