முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டம்: தவான், ராகுல், குல்தீப் யாதவ் தரவரிசையில் முன்னேற்றம்

செவ்வாய்க்கிழமை, 15 ஆகஸ்ட் 2017      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய் :  இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி தவான், லோகேஷ் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

9-வது இடத்திற்கு ...

இலங்கைக்கு எதிராக மூன்று போட்டிகள் கொணட டெஸ்ட் தொடரை இந்தியா 3-0 எனக் கைப்பற்றியது. இந்த மூன்று டெஸ்டில் இரண்டு சதங்கள் உள்பட 358 ரன்கள் குவித்தார் தவான். இதனால் தரவரிசையில் 10 இடங்கள் முன்னேறி 28-வது இடத்தைப் பிடித்துள்ளார். 2-வது மற்றும் 3-வது டெஸ்டில் அரைசதம் அடித்ததன் மூலம் லோகேஷ் ராகுல் 9-வது இடத்தை பிடித்துள்ளார். ஏற்கனவே இதற்குமுன் 9-வது இடத்தை பிடித்திருந்தார். தற்போது மீண்டும் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

58-வது இடத்தில் குல்தீப் ....

96 பந்தில் 108 ரன்கள் குவித்த ஹர்திக் பாண்டியா 45 இடங்கள் முன்னேறி 68-வது இடத்தைப் பிடித்துள்ளார். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் மொகமது ஷமி ஒரு இடம் முன்னேறி 19-வது இடத்தையும், உமேஷ் யாதவ் ஒரு இடம் முன்னேறி 21-வது இடத்தையும் பிடித்துள்ளனர். குல்தீப் யாதவ் 29 இடங்கள் முன்னேறி 58-வது இடத்தை பிடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து