முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய இந்தியாவை உருவாக்க நாம் கடுமையாக உழைக்க வேண்டும்: சுதந்தர தின விழாவில் பிரதமர் மோடி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 15 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம். அடுத்த 5 ஆண்டுகள் நாம் கடுமையாக உழைத்து புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என சுதந்தர தின விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

சாதனை படைத்தோம் ...

71-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் மோடி ஆற்றிய உரையில் பேசியதாவது:-

வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வில் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.  துன்பங்கள் பல வந்தாலும், விவசாயிகள் கடும் உழைப்பினால் சாதனைகள் படைத்து வருகின்றனர். பிரதமர் மோடி பிரதான் மந்திரி முத்ரா யோஜனா   திட்டத்தால், ஏராளமான இளைஞர்கள் சொந்த காலில் நின்று சுயதொழில் தொடங்கியுள்ளனர். கடந்த ஆட்சியில் ரயில்வே திட்டங்கள் நிறைவேற 42 ஆண்டுகள் தேவைப்பட்டன. மங்கள்யான் திட்டத்தை 9 மாதத்தில் செயல்படுத்தி சாதனை படைத்துள்ளோம். சவால்களை கடந்து நாம் ஒற்றுமையுடன் இருப்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது. இயற்கை பேரிடர்களால் சில நேரங்களில் இன்னலை சந்திப்பது வேதனை. ஒற்றுமை, கூட்டு முயற்சியால் மட்டுமே தேசத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் . விவசாயிகளும், தொழிலாளர்களும் நாட்டின் கண்கள்.

பங்களிப்பு அவசியம்....

புதிய இந்தியாவை உருவாக்க 125 கோடி மக்களின் பங்களிப்பு அவசியம். அதேபோல், நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம். அடுத்த 5 ஆண்டுகள் நாம் கடுமையாக உழைத்து புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். நம் நாட்டில் அனைவரும் சமமானவர்கள்; பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு கிடையாது. தீவிரவாதத்திற்கு எதிராக நமது போராட்டம் என்றும் நீடித்திருக்கும்; இந்த போராட்டத்தில் முப்படை வீரர்களின் தியாகம் போற்றத்தக்கது. பயங்கரவாத ஒழிப்பில் ஒத்துழைக்கும் உலக நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.தீவிரவாதத்திற்கு எதிராக நமது போராட்டம் என்றும் நீடித்திருக்கும்; இந்த போராட்டத்தில் முப்படை வீரர்களின் தியாகம் போற்றத்தக்கது.

கிராமங்களுக்கு மின்சாரம்

நீர், நிலம், ஆகாயம் என அனைத்து இடங்களிலும் எதிரிகளை சமாளிக்கும் சக்தி இந்தியாவுக்கு உண்டு. மின்சாரம் இல்லாத 14 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஏழை மக்கள் மற்றும் நாட்டை கொள்ளையடித்தவர்கள் இன்று நிம்மதியாக தூங்க முடியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து