முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி முதல்வர் யோகிஆதித்யநாத் ராஜினாமா செய்யவேண்டும்: முன்னாள் எம்.பி., என்.எஸ்.வி.சித்தன் வலியுறுத்தல்:

புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- அரியலூர் ரயில் விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்று அன்றைய மத்திய அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி ராஜினாமா செய்யதது போல் கோரக்பூரில் 70குழந்தைகள் பலியான சம்பவத்திற்கு பொறுப்பேற்று உத்தரபிரதேச முதல்வர் யோகிஆதித்யநாத் ராஜினாமா செய்திட வேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுத்தலைவரும்,முன்னாள் எம்.பியுமான என்.எஸ்.வி.சித்தன் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருமங்கலத்தில் நடைபெற்ற 71வது சுதந்திர தினவிழாவிற்கு மாவட்ட தலைவரும்,முன்னாள் பேரையூர் பேரூராட்சி தலைவருமான கே.கே.குருசாமி தலைமை வகித்தார்.இவ்விழாவில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுத்தலைவரும்,முன்னாள் எம்.பி.யுமான என்.எஸ்.வி.சித்தன் கலந்து கொண்டு தேசியக்கொடியேற்றி வைத்து கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கியதுடன் தெற்குதெருவில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த என்.எஸ்.வி.சித்தன் கூறியதாவது:
அரியலூர் ரயில் விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்று அன்றைய மத்திய அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி ராஜினாமா செய்தது போல் கோரக்பூரில் 70 குழந்தைகள் பலியான சம்பவத்திற்கு பொறுப்பேற்று உத்தரபிரதேச முதல்வர் யோகிஆதித்யநாத் தனது பதவியை ராஜினாமா செய்திட வேண்டும்.இந்திய மக்கள் அனைவரையும் பாதிக்கும் வகையில் ஜி.எஸ்.டி அமல் படுத்தப்பட்டுள்ளது.ஜி.எஸ்.டி.யின் பாதிப்புகளை உணர்ந்ததால்தான் அறிமுகம் செய்த காங்கிரஸ் அதனை அமல் படுத்தவில்லை.ஜி.எஸ்.டி.யால் தற்போது ஊழலும் முறைகேடுகளுமே அதிகமாகியுள்ளது.பல்லாயிரம் கோடிகளை வருமானமாக தந்திடும் தாதுமணல் விற்பனையை தமிழக அரசு ஏற்று நடத்திடவேண்டும்.தமிழகத்திற்கு கூடுதலான ரயில்வே திட்டங்கள் கிடைத்திட தமிழக அரசு தனது பங்காக நிதி வழங்குவதுடன் தமிழக எம்.பிக்கள் ஒன்றிணைந்து குரல்கொடுத்திட வேண்டும் என்று தெரிவித்தார்.
அப்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் கே.கே.குருசாமி,மாவட்ட மகளிரணி தலைவர் ஆனந்திஅருள்,மாவட்ட பொருளாளர் கணேசன்,கல்லுப்பட்டி வட்டார தலைவர் டில்லிராஜ்,ஜெயகுமார்,சிவன்காளை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து