முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். ராணுவம் காஷ்மீரில் தொடர்ந்து 4-வது நாளாக போர்நிறுத்த மீறல்

புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

ஜம்மு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று 4-வது நாளாக தொடர்ந்து போர்நிறுத்த மீறலில் ஈடுபட்டனர். இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்தாண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் போர்நிறுத்த மீறலில் ஈடுபட்டு வருகின்றனர். இதை பயன்படுத்தி தீவிரவாதிகளும் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை தடுத்தும் வேலையில் இந்திய ராணுவத்தினர் தீவிரவாக உள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று 4-வது நாளாக ஜம்மு பகுதியில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகில் இருக்கும் இந்திய ராணுவ நிலைகள்,மற்றும் குடியிருப்புகள் மீதும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். சிறிய ரக ஆயுதங்கள் மார்ட்டர் பீரங்கிகள், தானியங்கி துப்பாக்கிகளால் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர் என்று இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கு இந்திய ராணுவத்தினர் தகுந்த பதிலடியை திறமையாக கொடுத்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த 13-ம் தேதியில் இருந்து தொடர்ந்து போர்நிறுத்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரில் உள்ள கிருஷ்ணகதி, நவ்ஷெரா, மான்கொடே ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சரமாரியாக சுட்டதில் இந்திய வீரர்கள் 3 பேர் காயம் அடைந்தனர். மேலும் கடந்த 12-ம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தினர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகதி என்ற பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் அப்பாவி பெண் ஒருவரும் மரணமடைந்தனர். கடந்த 8-ம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தினர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் வீரர் பவான் சிங் சுக்ரா படுகாயம் அடைந்தார். பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். கடந்த 7-ம் தேதி பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். கடந்த 6-ம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தினர் போர்நிறுத்தத்தை மீறி ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாபா ஹோரி என்ற இடத்தில் தாக்குதல் நடத்தியது. இப்படி இந்தாண்டில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர்நிறுத்த மீறலில் அடிக்கடி ஈடுபட்டு வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து