முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் கோரக்பூர் சம்பவம்: மோடி, அமீத்ஷாவின் மாறுபட்ட கருத்துக்கு மாயாவதி கண்டனம்

புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ, உத்திரப்பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும் பா.ஜ. தலைவர் அமீத்ஷா மாறுபட்ட விதத்தில் கருத்து கூறியிருப்பதற்கு முன்னாள் முதல்வர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மூளைக்காய்ச்சலால் நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். திடீரென்று ஆக்ஸிஜன் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுவதில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துவிட்டனர். இந்த சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பாரதிய ஜனதா தலைவர் அமீத்ஷா, பெங்களூர் வந்திருந்தபோது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் கோரக்பூர் சம்பவத்தைக்காட்டிலும் பெரிய அளவில் ஏற்கனவே நாட்டில் நடந்துள்ளது என்று கூறியதாக கூறப்படுகிறது. மேலும் கோரக்பூர் சம்பவமானது கிரிமினல்கள், அதிகாரிகளின் மெத்தனப்போக்கு, இயற்கை பேரழிவு ஆகிய காரணங்களால் நடந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக சொல்லப்படுகிறது.

இந்த இரண்டு தலைவர்களும் கோரக்பூர் சம்பவம் குறித்து மாறுபட்ட கருத்திலும் தவறான வகையிலும் கூறியிருப்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உரையாற்றுகையில் சில நேரங்களில் இயற்கை பேரழிவு பெரும் சவால்களாக உருவாகி விடுகின்றன. நல்ல நேரத்தில் பெய்யும் மழையானது நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது. சில நேரங்களில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை பேரழிவானது நாசத்தையும் சேதத்தையும் ஏற்படுத்துகிறது. சில நாட்களுக்கு முன்பு நாட்டின் பல பகுதிகளில் இயற்கை பேரழிவு ஏற்பட்டது. அடுத்த ஒரு சில நாட்களுக்கு முன்பு நம் நாட்டு குழந்தைகளில் பலர் மருத்துவமனையில் உயிரிழந்தனர் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து