முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நல்ல நாளில் அ.தி.மு.க அணிகள் இணைப்பு விழா நடக்கும் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி

புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : நல்ல நாள், நல்லமுகூார்த்தத்தில் அ.தி.மு.க இணைப்பு விழா நடக்கும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

தனி மெஜாரிட்டியுடன்...

வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க. மாபெரும் சக்தியாக விளங்குகிறது. இந்த ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது என்று மக்கள் வாழ்த்துகிறார்கள். அ.தி.மு.க. அரசை மக்கள் நன்றாக அறிந்து இருக்கிறார்கள். மக்கள் தேவைளை பூர்த்தி செய்து வருகிறது. அ.தி.மு.க. அரசு மீது 2 நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார்கள். அந்த 2 தீர்மானத்திலும் நம்பிக்கை வாக்கை பெற்று வெற்றி பெற்றது. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தனி மெஜாரிட்டியுடன் இருக்கிறோம். இந்த ஆட்சி தொடர மக்களும், எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் விரும்புகிறார்கள்.

4 ஆண்டுகள் தொடரும்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த அரசு தொடர தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. ஜெயலலிதா வழியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடத்தி வருகிறார். தினகரன் நடத்திய கூட்டத்தில் பேசியவர்களும், ஜெயலலிதா ஆட்சி நிலைக்க வேண்டும் என்று கூறினார்கள். இந்த ஆட்சி 4 ஆண்டுகள் தொடரும். அ.தி.மு.க அம்மா அணியும் , அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியும் இணைவதற்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். இணைவதற்கு தயாராக இருக்கிறார்கள். இரு அணிகள் இணைப்பு குறித்து நல்ல செய்தியை மூத்த அமைச்சர்கள் அறிவிப்பார்கள். நல்ல நாள், நல்ல முகூர்த்தத்தில் அ.தி.மு.க அணிகள் இணைப்பு விழா நடைபெறும்.

பிரிந்து செயல்படுவதால் நிர்வாக சீர்கேடு எதுவும் இல்லை. இரு அணிகளும் இணைந்தால் வலிமையாக செயல்பட முடியும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

கலைவாணர் அரங்கில்...

வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமநிர்வாக அலுவலர்கள், நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கங்களின் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இன்று சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்பார்கள். நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் கட்டுரைகள் மூலம் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சிக்கிறார். அவரது முயற்சிகள் பலிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து