முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி விரும்புவது ‘தூய்மை இந்தியா’ நாங்கள் விரும்புவது ‘உண்மை இந்தியா’ - ராகுல் காந்தி

வியாழக்கிழமை, 17 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : 2014-ல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பாஜக ஆட்சிமீது விமர்சனம் வைத்த ராகுல் காந்தி, மோடி விரும்புவது தூய்மை இந்தியா, நாங்கள் விரும்புவது உண்மை இந்தியா என்று தெரிவித்தார்.

ஷரத் யாதவ் நடத்திய எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி இவ்வாறு பேசினார். அப்போது மேக் இன் இந்தியா என்கிறார்கள் ஆனால் இங்குள்ள பல பொருட்கள் மேட் இன் சீனாவாக உள்ளது என்று சாடினார் ராகுல்.

2014 தேர்தல் வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது, அயல்நாட்டில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை இந்தியா கொண்டு வருகிறேன் என்றார், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்றார் ஆனால் ஒன்றும் நிறைவேறவில்லை.

இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத்தைக் காப்பாற்றுவோம் என்ற தலைப்பிலான இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டார். சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ தேசிய செயலர் டி.ராஜா ஆகியோரும் பங்கேற்றனர்.

இதில் பேசிய ராகுல் காந்தி, “மோடி விரும்புவது தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்), நாங்கள் விரும்புவதோ உண்மை இந்தியாவை (சச் பாரத்). எங்கு சென்றாலும் மோடி பொய் பேசிவருகிறார். நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையே வளைக்க ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறது. ஒருவர் இந்த நாடு என்னுடையது என்கிறார், மற்றொருவரோ நான் இந்த நாட்டைச் சேர்ந்தவர் என்கிறார் ஆர்.எஸ்.எஸ்.-க்கும் நமக்கும் உள்ள வேறுபாடு இது” என்றார் ராகுல் காந்தி

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து