முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் கலெக்டர் வெங்கடாசலம் ஆய்வு

வியாழக்கிழமை, 17 ஆகஸ்ட் 2017      தேனி
Image Unavailable

 தேனி.-    தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரண்மனைப்புதூர், நாகலாபுரம், கொடுவிலார்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், தாடிச்சேரி மற்றும் வெங்கடாசலபுரம் ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில்  மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை   மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
 ஆய்வின்போது, அரண்மனைப்புதூர் ஊராட்சியில் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா அமைக்கப்படவுள்ள பணி, ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படவுள்ள பணி, கொடுவிலார்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2.80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூட சமயலறை கட்டட கட்டுமானப்பணி, நாகலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட சிவலிங்கநாயக்கன்பட்டி கிராமத்தில் பிரதமமந்திரி ஆவாஸ் யேஜனா திட்டத்தின் கீழ் ரூ.1.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பிரதமமந்திரி ஆவாஸ் யேஜனா வீடு கட்டுமானப்பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் ரூ.0.07 இலட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் உறிஞ்சு குழாய் அமைக்கப்பட்டுள்ள பணி, நாகலாபுரம் ஊராட்சியில் பிரதமமந்திரி ஆவாஸ் யேஜனா திட்டத்தின் கீழ் ரூ.1.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பிரதமமந்திரி ஆவாஸ் யேஜனா வீடு கட்டுமானப்பணி, தாய்த்திட்டத்தின் கீழ் ரூ.27.66 இலட்சம் மதிப்பீட்டில் கோபாலபுரம் கிராமம் முதல் சங்ககோணம்பட்டி கிராமம் வரை சாலை அமைக்கும் பணி, ரூ.2.19 இலட்சம் மதிப்பீட்டில் அய்யப்பன் வீடு முதல் ராமசாமி வீடு வரை தெரு சாலை அமைக்கும் பணி, ரூ.2.28 இலட்சம் மதிப்பீட்டில் ராமர் வீடு முதல் ராமசாமி வீடு வரை தெரு சாலை அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் ரூ.0.12 இலட்சம் மதிப்பீட்டில் தனிநபர் கழிப்பறை கட்டுமானப்பணி ஆகிய பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.2.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடு கட்டுமானப்பணி, தாடிச்சேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் ரூ.1.00 இலட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள மட்கும் குப்பை, மட்க்காத குப்பை தரம்பிரிக்கும் கூடாரப்பணி, வெங்கடாசலபுரம் ஊராட்சியில் தாடிச்சேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் ரூ.2.01 இலட்சம் மதிப்பீட்டில் பண்ணை குட்டை மற்றும் வரப்பு அமைக்கும் பணி ஆகிய பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்   பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 ஆய்வுக்குப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழக அரசு ஊராட்சி பகுதிகளில் வாழ்கின்ற கிராமப்புற மக்களின் நலனை கருத்தில் கொண்டு, நகர்புறங்களில் கிடைக்கப்பெறும் அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை கிராமப்புறங்களில் செயல்படுத்தி வருகிறது. மேலும், தமிழக அரசு தமிழகத்தை சுத்தமான, சுகாதாரமான மாநிலமாக மாற்றிட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் தங்களின் குடியிருப்புகளில் கழிப்பறைக்கு தேவையான இட வசதி இருந்தால் தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000ஃ- அரசு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இடவசதி இல்லாத இல்லங்களுக்கு பொது கழிப்பறையையும் ஏற்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 கிராமப்புற பகுதிகளில் வீடுகள் இல்லாத நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் வீடுகள் கட்டி வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்களின், வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட, குறைந்தபட்ச அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, தாய்த்திட்டத்தின் மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் உள்ள குக்கிராமங்களில் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, ஒரு குக்கிராமத்தில் தற்போதுள்ள வசதிகள் என்னென்ன தேவைப்படும் என்பதை அறிந்து பணிகள் தேர்வு செய்யப்பட்டு தாய் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
 மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், சுற்றுப்புறச் சூழ்நிலைகளை பராமரித்து சுகாதாரமாக வைத்துக் கொள்ளவும், கிராம ஊராட்சிகளில் பெறப்படும் மற்றும் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றிடவும், ஊராட்சிப் பகுதிகளில் சாலைகள், மின்விளக்கு மற்றும் குடிநீர் வசதிகளை முறையாக பராமரித்திடவும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என  மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம், தெரிவித்தார்.
 ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  கோவிந்தராஜ்   தி.மலர்விழி  உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து