முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சின்சினாட்டி டென்னிஸ்: சானியா - ஷூவாய் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

வியாழக்கிழமை, 17 ஆகஸ்ட் 2017      விளையாட்டு
Image Unavailable

ஒஹியோ: சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, மகளிர் இரட்டையர் பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

இரட்டையர் பிரிவு ...
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா-சீனாவின் பெங் ஷூவாய் ஜோடி, காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில், ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜஸ்-உக்ரைனின் ஓல்கா சாவ்சக் ஜோடியை எதிர்த்து விளையாடியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 7-5 6-4 என்ற நேர்செட்களில் சானியா ஜோடி வெற்றி பெற்று காலிறுதியை உறுதி செய்தது.

காலிறுதியில் ...
காலிறுதியில் ரோமானியாவின் இரினா கேமலியா பெகு-ராலுகா ஜோடியை எதிர்கொள்கிறது. இப்போட்டி நேற்று நடைபெற உள்ளது. ஆடவர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார், அமெரிக்காவின் டொனால்ட்சனிடம் 4-6 6-2 4-6 என்ற செட்கணக்கில் தோல்வி அடைந்தார். ரோகன் போபண்ணா-இவான் டோடிக் ஜோடி, இரண்டாம் சுற்றில் ஜூவான் கேபல்-பேபியோ போக்னினி ஜோடியை சந்திக்க உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து