முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் நிலையங்களில் மலிவு விலை மருந்துக்கடைகள் - மத்திய அரசு திட்டம்

வியாழக்கிழமை, 17 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பெட்ரோல் நிலையங்களில் மலிவு விலை மருந்துக்கடைகள் திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

இது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில்,

உஜாலா திட்டத்தின் மூலம் வரும் 2019-ம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் எல்.இ.டி விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெட்ரோல் நிலையங்களில் எல்.இ.டி பல்புகள் உள்ளிட்டவற்றை விற்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மேலும் பெட்ரோல் நிலையங்களில் மலிவு விலை மருந்து கடைகளை திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், மத்திய ரசாயன அமைச்சகத்தில் உள்ள மருந்தியல் துறையின் கீழ் மருந்தகங்கள் செயல்படும். இ-ஆதார் கார்டுகள் சேவைகளை பெட்ரோல் நிலையங்களில் வழங்குவது பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து