முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்லாமிய எதிர்ப்பு, அயல் நாட்டினர் மீது வெறுப்பு ஆகியவை நமது சமூகத்தை விஷம் ஆக்குகின்றன ஐ. நா பொதுச் செயலாளர் வேதனை

வெள்ளிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

 நியூயார்க்: இனவாதம், அயல்நாட்டினர் மீது வெறுப்பு, இஸ்லாமிய எதிர்ப்பு இவை உலகில் எங்கு இருந்தாலும் அவை வெறுக்கப்பட கூடியவை என்று ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வர்ஜினியாவில் நடந்த இனவாத கலவரத்தையடுத்து இக்கருத்தை அந்தோனியா குத்தேரஸ் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் வர்ஜினியா மாகாணத்தில் நடந்த உள் நாட்டுப் போரில் பங்கேற்ற படை தளபதி ராபர்ட் எட்வர்டு லீயின் உருவச் சிலையை அகற்ற வெர்ஜினியா அரசு முடிவு செய்ததையடுத்து. குறிப்பிட்ட வெள்ளை இன மக்கள் சார்லோட்டஸ்வில்லே நகரில் இனவெறிக்கு எதிராக பேரணி நடத்தினர். அப்போது அங்கு வேகமாக வந்த கார் ஒன்று, பேரணியாகச் சென்றவர்கள் மீது மோதியது இதில் பெண் ஒருவர் பலியானார். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனையடுத்து வர்ஜினியாவிலுள்ள வெள்ளை இனத்தவரின் இருதரப்புக்குகிடையே வன்முறை ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து  டிரம்ப் பேசும்போது, “இந்த வன்முறை சம்பவத்தில் (வெள்ளை இனவாத அமைப்பினர், நியோ-நாஜி இயக்கத்தினர்) இரு தரப்பினர் மீதும் தவறுள்ளது” என்று கூறினார்.

இந்த நிலையில் இந்தச் சம்பவம் குறித்த ஐ.நா பொதுச் செயலாளர் மவுனம் காப்பது அமெரிக்க அரசின் அழுத்தத்தாலா? என கேள்வி எழுப்பியதற்கு, பதிலளித்த அந்தோனியோ ”நான் எனது கருத்தை பேசுவதற்கு எந்த அழுத்தமும் தரப்படவில்லை. நான் டிரம்பின் கருத்து குறித்து பேசப் போவதில்லை. நான் என் கொள்கைகளை உறுதிப்படுத்துகிறேன். எனது கொள்கைகள் மிக தெளிவானவை. இனவாதம், இஸ்லாமிய எதிர்ப்பு, அயல் நாட்டினர் மீது வெறுப்பு ஆகியவை நமது சமூகத்தை விஷம் ஆக்குகின்றன. இவற்றை நாம் எந்த நேரத்திலும் எல்லா இடத்திலும் எதிர்க்க தயாராக இருக்க வேண்டும்.” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து