முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ மாணவர் சேர்க்கையில் யாருக்கும் பாதிப்பு இருக்காது : அமைச்சர் உறுதி

வெள்ளிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி: மருத்துவ மாணவர் சேர்க்கையில் இருதரப்பும் பாதிக்காத வகையில் தமிழக அரசு முடிவெடுக்கும் என்று விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக டெல்லி சென்றுள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும் போது, இருதரப்பு மாணவர்களுக்கும் பாதிப்பு இருக்காது என்று தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் கிராமப்புற மாணவர்களுக்கும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். தமிழக சட்டத்துக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் தரும் என்று விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

மேலும், இந்தப் பிரச்சனையில் தாமதம் எதுவும் நடக்கவில்லை. தொடர்ந்து எடுத்து வரும் முயற்சிதான் இது என்று தெரிவித்த அமைச்சர், நீட் தேர்வு என்பது உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது என்று கூறினார்.

இந்தப் பிரச்சனைகள் எல்லாம் முடிந்துவிட்டால் தமிழகத்தில் கலந்தாய்வு நடத்த ஒரு வாரம் போதும் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து