முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஸ்ஸாமில் கொட்டித்தீர்த்த கனமழை: யானைகள் உள்ளிட்ட 140 வன விலங்குகள் வெள்ளத்தில் மூழ்கி பலியான பரிதாபம்

வெள்ளிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் கொட்டிவரும் கனமழையால் அம்மாநிலமே வெள்ளத்தில் மிதக்கிறது. அதனால் உலகப்புகழ்பெற்ற காசிரங்க தேசிய வனவிலங்கு பூங்கா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதில் 140 விலங்குகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இது விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் ஒருவாரமாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் வற்றாத பிரமாண்ட ஜீவநதியான பிரம்மபுத்திரா உள்ளிட்ட பல ஆறுகளில், மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால், மாநிலத்தில் எல்லா மாவட்டங்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ள நீரில் சிக்கித்தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினருடன் ராணுவ வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.

அஸ்ஸாமின் முக்கிய பாலங்கள், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து முடங்கிப்போயுள்ளது. மேலும், கோல்காட் மற்றும் நகவுன் மாவட்டங்களை ஒட்டியுள்ள புகழ்பெற்ற வனவிலங்கு காப்பகமான காசிரங்கா தேசியப் பூங்கா முழுவதும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

அங்கு பராமரிக்கப்பட்டுவரும் விலங்குகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றது. ஆனாலும் நிலைமை கைமீறிப்போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 500 சதுர கிலோமீட்டர் அளவுள்ள இந்த பூங்காவின் 80 சதவீதம் பகுதி வெள்ளத்தால் மிதக்கிறது. இதே நிலை நீடித்தால் இந்த வனவிலங்கு காப்பகத்தில் உள்ள சிங்கம், புலி, அரியவகை ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் போன்றவை வெள்ளத்தில் மூழ்கி இறக்க வாய்ப்புள்ளது.
மேலும், அந்த விலங்குகள், மழைவெள்ள நீரில் நீந்தியபடி, அருகாமையில் உள்ள ஊர்களுக்குள் புகுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதால் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.

இதுவரை வெள்ளத்தில் மூழ்கி இரு யானைகள், 10 காண்டா மிருகங்கள், 120-க்கும் மேற்பட்ட சதுப்பு நில மான்கள், காட்டெருமைகள், முள்ளம்பன்றி என மொத்தம் 140 வன விலங்குள் உயிரிழந்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து