முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி கலெக்டர் நடராஜன் தலைமையில் எடுத்துக்கொண்டனர்

வெள்ளிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் நல்லிணக்க நாள் உறுதி மொழியினை கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் நல்லிணக்க நாள் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த தினமான ஆகஸ்ட் 20-ஆம் நாள் ஆண்டுதோறும் சமுதாய நல்லிணக்க தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  அதனடிப்படையில்  தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் சமுதாய நல்லிணக்க நாள் உறுதிமொழியினை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.   அந்தவகையில் ராமநாதபுரத்தில் கலெக்டர் தலைமையில்,  ‘நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன்.  மேலும், எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல் பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்பு சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன்” என்ற சமுதாய நல்லிணக்க நாள் உறுதிமொழியினை அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.
 இந்நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட கலெக்டரின்  நேர்முக உதவியாளர் (பொது) வ.முருகானந்தம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு  அலுவலர் கோ.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) கோ.கணேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் என்.சுஜிபிரமிளா உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து