சிவகங்கை.சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சு.மலர்விழி, தலைமையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நல்லிணக்க நாள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
நல்லிணக்க நாள் உறுதிமொழி
நான் சாதி, இன வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன். மேலும், எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சு வார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலி கட்டிய திருவிளையாடல்
- திருப்பரங்குன்றம் ஆண்டவர் பச்சை குதிரையில் பவனி
- திருச்சேறை சாரநாதர் பரமபதநாதர் திருக்கோலம்
- பழனிஆண்டவர் உற்சவாரம்பம்
- கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி சூர்ய பிரபையில் பவனி
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, விருசப வாகனத்தில் வீதிவுலா