முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்க்கரை மானியத்தை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தி தர வேண்டும்: பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி கடிதம்

வெள்ளிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, சர்க்கரை மானிய தொகையை கிலோவுக்கு ரூ.28.50 ஆக உயர்த்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

ரூ.10 கூடுதல் செலவு...

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர்கூறியிருப்பதாவது:-

ரேஷன் கடைகளில் ஒரு குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு கிலோ சர்க்கரை தான் வழங்கப்படும் என்றும், சர்க்கரைக்கு வழங்கப்படும் மானியத்தை கிலோவுக்கு ரூ.18.50 ஆக கட்டுப்படுத்தி இருப்பதாக வந்திருக்கும் தகவல்களை தொடர்ந்து இந்த கடிதத்தை எழுதுகிறேன். சர்க்கரைக்கான ரூ.18.50 மானியத்தொகை 2002-ம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்டதாகும். அப்போது சந்தையில் சர்க்கரையின் விலை ரூ.32 ஆக விற்கப்பட்டது. தற்போது சந்தையில் ஒரு கிலோ சர்க்கரையின் விலை 42 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மாநில அரசுக்கு ஒரு கிலோ சர்க்கரைக்கு ரூ.10 வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது.

35,500 மெட்ரிக் டன் ...

எனவே மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் சர்க்கரை மானியத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். குறைந்த பட்சம் ஒரு கிலோ சர்க்கரைக்கு ரூ.28.50 ஆக மானியம் வழங்கும் வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டும். அதாவது கூடுதலாக ரூ.10 உயர்த்தித் தரப்பட வேண்டும்.  சர்க்கரை என்பது தமிழ்நாட்டில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. மாதம் ஒன்றுக்கு தமிழ்நாட்டில் 35,500 மெட்ரிக் டன் நுகர்வு செய்யப்படுகிறது. எனவே இதை கருத்தில் கொண்டு நிதிச் சுமையை மாநில அரசு ஏற்க வேண்டிய நிலையையும் கருத்தில் கொண்டு சர்க்கரை மானிய தொகையை கிலோவுக்கு ரூ.28.50ஆக உயர்த்தி அறிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து