முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாமில் வெள்ள பாதிப்பை சமாளிக்க அனைத்து உதவியும் வழங்கப்படும்: பிரதமர் மோடி உறுதி

வெள்ளிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் கடந்த ஒருமாத காலமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பிரமபுத்திரா உள்பட மாநிலத்தின் அனைத்து நதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது. முதலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அசாம் மாநிலத்தின் மேல்பகுதி கடுமையாக பாதித்தது. தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் கீழ் அசாம் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள கிராமங்கள் மூழ்கியுள்ளன. ரயில் தண்டவாளங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வெள்ள பாதிப்பை எடுத்துரைத்து நிவாரணம் கோருவதற்காக மாநில கவர்னர் பன்வரிலால் புரோகித் நேற்று புதுடெல்லி வந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது அசாம் மாநிலத்தில் 3-வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதையும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பையும் எடுத்துக்கூறினார். வெள்ள பாதிப்பை சமாளிக்க போதுமான அளவுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வெள்ளத்தால் 23 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 33 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பதாகவும் அவர்களுக்கு உதவி செய்ய மேலும் மத்திய படையை அனுப்ப வேண்டும் என்றும் கவர்னர் புரோகித் கேட்டுக்கொண்டார். அப்போது வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்திற்கு தேவையான உதவிகள் அனைத்தும் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்ததாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து