முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம் இணைந்தது: தேசிய நிர்வாகக்குழுக்கூட்டத்தில் தீர்மானம்

சனிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

பாட்னா :  பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டத்தில் இணைய ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்துள்ளது. முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற தேசிய நிர்வாகக்குழுக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆதரவுடன் முதல்வராக நிதீஷ்குமார் பதவி ஏற்றதற்கு ஐக்கிய ஜனதாதளத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனையொட்டி கட்சி இரண்டாக பிளவு பட்டுள்ளது. கட்சியின் மற்றொரு தலைவரான சரத்யாதவ் தலைமையில் ஒரு பிரிவினர் தனியாக செயல்படத்தொடங்கிவிட்டனர்.

இந்தநேரத்தில் இருதரப்பினரும் தனித்தனியாக கூட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். சரத்யாதவ் தலைமையில் நேற்று மாநில தலைநகர் பாட்னாவில் பிரமாண்டமான மாநாடு நடைபெற்றது. மற்றொரு பக்கம் முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளத்தின் தேசிய நிர்வாகக்குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டத்தில் இணைவது என்று முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேசமயத்தில் கட்சியின் மூத்த தலைவரான சரத்யாதவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதற்காக ஐக்கிய ஜனதாதளத்தில் பிளவு இல்லை என்று கட்சியின் முக்கிய தலைவர் தியாகி, கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகி பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு ஐக்கிய ஜனதாதளத்தின் தேசிய நிர்வாகக்குழு ஒப்புதல் அளித்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு ஐக்கிய ஜனதா தளத்தை பாரதிய ஜனதா தலைவர் அமீத்ஷா கேட்டுக்கொண்டார். அதை ஏற்று தேசிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளோம் என்று தியாகி கூறினார்.

தேசிய நிர்வாகக்குழுக்கூட்டத்தில் மொத்தம் உள்ள 20 மாவட்டங்களில் 16 மாவட்ட கட்சி தலைவர்கள், கட்சியின் 71 எம்.எல்.ஏ.க்கள், மாநிலத்தில் உள்ள 30 எம்.எல்.சி.கள் மற்றும் நிதீஷ்குமாரால் நியமிக்கப்பட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். வருகின்ற 27-ம் தேதி ராஷ்ட்ரீய ஜனதாதளம் சார்பாக பீகாரில் பேரணி நடைபெற உள்ளது. அதற்கு பின்னர்தான் சரத்யாதவ் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து