முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாள வெள்ள பாதிப்புக்கு நிதி உதவி: பிரதமர் மோடிக்கு நேபாள பிரதமர் நன்றி

சனிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

காத்மாண்டு, நேபாள வெள்ள பாதிப்புக்கு நிதி உதவி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு நேபாள பிரதமர் ஷெர் பகதூர் நன்றி தெரிவித்துள்ளார்.

ரூ.25 கோடி நிதி

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கன மழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  தற்போது வரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 120 பேர் கொல்லப்பட்டனர். 35 பேர் மாயமாகியுள்ளார்.  லட்சகணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளார். வெள்ளத்தால் கடும் பாதிப்புக்குள்ளான நேபாளத்திற்கு இந்தியா சார்பில் ரூ.25 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தியூபாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய இந்திய பிரதமர் மோடி, நேபாளத்திற்கு இந்தியா, தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதி அளித்தார்.

பிரதமர் மோடிக்கு நன்றி

இந்த நிலையில், இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி  தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நேபாள பிரதமர் தியூபா, “ வெள்ள நிவார பணிக்காக ரூ.25 கோடி உடனடியாக ரொக்கமாக அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். பிரதமர் மோடி தொலைபேசியில் அழைத்து பேசியது பெருமை அளிப்பதாகவும், நேபாளத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து தனது கவலையை வெளிப்படுத்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து